கொடுக்கலாம், ஊட்டியா விட முடியும்: பவார்
டெல்லி:உடம்பு சரியில்லை என்றால் தண்ணீரை கொதிக்க வைத்துத் தான் தர முடியும். குடி என்று கட்டாயப்படுத்த முடியாது. அதேபோல நமது கிரிக்கெட்அணியின் தோல்விகளுக்கு பயிற்சியாளரை மட்டும் பொறுப்பாளியாக்க முடியாது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா மோசமாக ஆடி வெளியேறியுள்ளது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரும், மத்தியஅமைச்சருமான சரத்பவார் கருத்து தெரிவிக்கையில், விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால் வங்கதேசம் மற்றும் இலங்கையுடனானஆட்டங்களில் நமக்கு கிடைத்தது சகஜமான தோல்வி போல தெரியவில்லை.
இந்திய அணியின் இந்த தொடர் தோல்வி கோடிக்கணக்கான ரசிகர்களின் அதிருப்தியை அடையச்செய்துள்ளது.
உலகிலேயே வேறு எந்த அணியையும் விட இந்திய கிரிக்கெட் வீரர்களுக்காகத்தான் அதிகம் செலவு செய்யப்படுகிறது. கிரிக்கெட் வாரியம்ஏகப்பட்ட வசதிகள் செய்து தருகிறது.
அதற்குப் பிரதியுபகாரமாக போட்டியில் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதும் நியாயம்தான். அந்த நம்பிக்கை,நல்லெண்ணத்தை அவர்கள் தகர்த்து விட்டார்கள்.
இனிமேல், வீரர்கள் தேர்வில் சீனியாரிட்டி, பழைய சாதனை என பார்க்கக் கூடாது. திறமை இருந்தால்தான் இனிமேல் அணியில் சேர்க்க வேண்டும்.இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளது போன்ற தேர்வு முறை இங்கும் கடைப்பிடிக்கப்படும்.
ஆஸ்திரேலியாவில் தற்போது யார் நல்ல பார்மில் இருக்கிறார்களோ அவர்களுக்கே அணியில் இடம் தரப்படுகிறது. பழைய சாதனைகளை அவர்கள்பார்ப்பதில்லை. அதே முறை இங்கும் கடைப்பிடிக்கப்படும்.
பயிற்சியாளர் கிரேக் சாப்பலின் பதவிக்காலம் உலகக் கோப்பைப் போட்டியுடன் முடிவடைகிறது. பதவிக்காலத்தை நீட்டிப்பதா அல்லது முடித்துக்கொள்வதா என்பது குறித்து மறு பரிசீலனை செய்யப்படும் என்றார் பவார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications