ஜப்பானில் பயங்கர பூகம்பம்: பலர் பலி-சுனாமி தாக்குதல் எச்சரிக்கை விடப்பட்டது!
டோக்யோ:மத்திய ஜப்பான் கடலில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பலர் பலியாகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சுனாமிஎச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
![]() |
ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள இஷிகாவாவில் உள்ள நோடோ தீபகற்பப் பகுதியில் கடலுக்கு அடியில் இன்று காலை 6.12 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோவிலில் இது 7 ஆக பதிவாகியுள்ளது.
இந்த பூகம்பத்தால் மத்திய ஜப்பான் கடலோரப் பகுதியில் கட்டடங்கள் கடுமையாக அதிர்ந்தன. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்துசுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கத் தொடங்கியுள்ளன. நானாவோ என்ற நகரில் பல கட்டடங்கள் இடிந்துள்ளன. இதில்பலர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணியில் இறங்கியுள்ளன.
இங்குள்ள சாலைகளில் பெரிய அளவிலான வெடிப்புகள், விரிசல்கள் காணப்படுகின்றன. நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் ஆடியதால் மக்கள்கட்டடங்கள், வீடுகளை விட்டு வெளியேறினர். இங்கு சாலைப் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. விமான, ரயில் சேவைகளும் கூடரத்து செய்யப்பட்டுள்ளன.
இங்கு அணு சக்தி நிலையங்கள் உள்ளன. ஆனால் அவற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டோக்கியோவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இருப்பினும் இங்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை.
50 செ.மீ உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதேபோல, வனுவட்டு என்ற தீவு நாட்டிலும் பூகம்பம் ஏற்பட்டது. இங்கு 7.2 ரிக்டராக பூகம்பம் பதிவாகியுள்ளது. வனுவட்டு பூகம்பத்தால் ஏற்பட்டபாதிப்புகள் குறித்து தகவல்கள் இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications