வெடிகுண்டு மிரட்டல்: வியாபாரி கைது
சேலம்:சேலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, எம்.பி.ஏ படித்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
சேலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு வியாழக்கிழமை ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில், மெய்யனூரில் உள்ள ஒரு எலக்ட்ரானிக் பொருள்விற்கும் கடையின் முகவரியைக் குறிப்பிட்டு அந்தக் கடையில், ரூ. 14 லட்சம் மதிப்புள்ள ட்ெடனேட்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை வைத்து மாநகராட்சி அலுவலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குண்டுவெடிப்பு நடத்தப்படப் போகிறது என்றுகூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த கடைக்கு போலீஸார் விரைந்தனர். அங்கிருந்த கோவிந்தராஜுவிடம் விசாரித்தபோது அவர் அனுப்பவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த ராஜகணபதி என்பவர்தான் இந்த மிரட்டல் கடிதத்தைஅனுப்பியது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து ராஜகணபதியை போலீஸார் பிடித்து விசாரித்தனர். ராஜகணபதி அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர். இவரும் மின்னணுப்பொருட்களை விற்கும் கடையை வைத்துள்ளார்.
தொழில் போட்டி காரணமாக கோவிந்தராஜுவின் பெயரில் போலியான மிரட்டல் கடிதத்தை அனுப்பியுள்ளார். மேலும், ராஜகணபதி மீதுபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் வரதட்சணைக் கொடுமை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் அவர் மீதுபிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அதுவும் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications