துணை நகரம் கண்டிப்பாக தேவை: காங்.
சென்னை:எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் சென்னை அருகே துணை நகரம் அமைக்கப்பட்டே ஆக வேண்டும் என்று வேலூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் சட்டசபையில் வலியுறுத்தினார்.
சட்டசபையில் நடந்த பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கலந்து கொண்டு ஞானசேகரன் பேசுகையில், வேலூரில் சட்டக் கல்லூரி, விமான நிலையம், தோல் பதனிடும் தொழிற்சாலை, தொழில்நுட்பப் பூங்கா ஆகியவற்றை அமைக்க வேண்டும்.
வேலூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய நகராட்சிகளை தரம் உயர்த்தி மாநகராட்சிளாக அறிவிக்க வேண்டும்.
கூட்டணிக் கட்சிகள் இடித்துப் பேசலாம் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. 1991ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் எங்களது தலைவர் ராஜீவ் காந்தியை நாங்கள் இழந்தோம். இன்று விடுதலைப் புலிகளின் நடமாட்டம் தமிழகத்தில் பெருகியுள்ளது. சில கட்சிகள் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
புலிகளின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் இயக்கங்களை முதலில் ஒடுக்க வேண்டும். கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 8 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக, மதிமுகவைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அருகே துணை நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு விடக் கூடாது. எதிர்ப்புகளை சமாளித்து அத்திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்றார் ஞானசேகரன்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications