சன் டிவி கணக்கு என்ன? கேட்கிறார் ஜெ.
சென்னை: சன் டிவி குழுமத்தின் கணக்கு வழக்குகளை பகிரங்கமாக வெளியிட தயாரா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை, பாலாறு அணை என அண்டை மாநிலங்களுடனான பிரச்சினையில் தமிழர்களுக்கு விரேதாகமாவும், அந்த மாநிலங்களுக்கு ஆதரவாகவும் கருணாநிதி நடந்து கொள்வதை நான் அவ்வப்போது அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறேன்.
கருணாநிதியின் இந்த தமிழர் விரோத நிலைப்பாட்டுக்குக் காரணம் என்னவென்றால் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் அவரது குடும்பத் தொலைக்காட்சிகள் மூலம் கிடைக்கும் அபரிமிதமான வருவாய்தான். இந்தத் தொலைக்காட்சிகள் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானம் அவர்களுக்குக் கிடைக்கிறது.
கர்நாடகத்தில் உதயா, உதயா-2, உதயா மூவிஸ், உஷே, உதயா வார்த்தகங்கள் என ஐந்து டிவிகள் உள்ளன. ஆந்திராவில் ஜெமினி, தேஜா நியூஸ், ஜெமினி மியூசிக், ஜெமினி நியூஸ், ஜிசிவி என ஐந்து சேனல்கள் உள்ளன.
கேரளாவில் சூர்யா, கிரண், சூர்யா மூவிஸ், சூர்யா நியூஸ் என நான்கு சேனல்கள் உள்ளன. இவை தவிர கேபிள் டிவி நிறுவனங்களையும் இங்கு நடத்தி அதிலும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் வருகிறது.
இந்தத் தொலைக்காட்சிகளில் யார் யார் பங்குதாரர்களாக உள்ளனர், குடும்ப உறுப்பினர்களின் பங்கு என்ன, இவற்றிலிருந்து ஒவ்வொருவருக்கும் ஆண்டு வருமானம் எவ்வளவு, ஒவ்ெவாரு டிவிக்கும் ஆண்டு வருவாய் எவ்வளவு என்பதை கருணாநிதியால் தெரிவிக்க முடியுமா?
இதுதவிர, இந்த மூன்று மாநில தொலைக்காட்சிகளிலும் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினை குறித்து எத்தனை முறை செய்திகள் வெளியாகின, எந்தெந்த தேதியில் அவை வெளியாகின என்பதை தேதி குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?
வருவாயை மனதில் கொண்டு அந்தந்த மாநிலங்களில் தமிழர்களின் வாழ்வாதாரமா இந்த பிரச்சினைகள் குறித்த செய்திகள், அவர்களுளின் வருவாயைப் பாதிக்காத வகையில் ஒளிபரப்பப்படுகின்றன.
சன் குழுமத்தைச் சேர்ந்த மேற்படி சானல்களின் ஆண்டு வருவாய் உள்ளிட்ட கணக்கு வழக்கு விவரங்களை பகிரங்கமாக வெளியிட அவர்கள் தயாரா என்பதை கருணாநிதி விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications