கடனுக்காக கர்ப்பிணி கழுத்து அறுத்துக் கொலை
Subscribe to Oneindia Tamil
மலப்புரம் (கேரளா): வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததல் கேரளாவில் கர்ப்பிணி பெண் பக்கத்து வீட்டு வாலிபரால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரக்கல்லு என்ற ஊரைச் சேர்ந்தவர் கதீஜா (32). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது கதீஜா கர்ப்பமாக இருந்து வந்தார்.
பக்கத்து வீட்டில் வசிக்கும் வினீத் (22) என்பவரிடம் கதீஜா ரூ.20 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இதை திருப்பிச் செலுத்து தாமதமாகியுள்ளது. இது தொடர்பாக கதீஜாவிடம், வினீத் சண்டை போட்டுள்ளார்.
அப்போது கோபமடைந்த வினீத் அரிவாளால் கதீஜாவை சரமாரியாக வெட்டினார். கதீஜாவின் கழுத்தை அவர் அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கதீஜா பரிதாபமாக இறந்தார்.
போலீஸார் விரைந்து வந்து வினீத்தைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications