புலிகள் தற்கொலைத் தாக்குதலில் 7 பேர் பலி
கொழும்பு:விமானத் தாக்குதல் நடந்த பரபரப்பு மாறாத நிலையில், இலங்கையின் கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் இன்று நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி ராணுவ முகாமுக்குள் இன்று ஒரு வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டிராக்டரில் விடுதலைப் புலி ஒருவர் உள்ளே புகுந்தார்.
முகாமுக்குள் நுழைவதற்கு முன்பாகவே அந்த டிராக்டர் வெடித்துச் சிதறியது. இதில் அந்த விடுதலைப் புலியும், 2 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். முகாமுக்கு அருகே வசிக்கும் பொதுமக்களில் 4 பேரும் இந்தத் தாக்குதலில் பலியாகினர்.
இந்தத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியே பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. உயிர்ப் பலி மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சம்பந்தப்பட்ட முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இருந்தனர். அவர்களின் கதி என்ன என்று ராணுவம் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே நேற்று விடுதலைப் புலிகள் கொழும்பு விமானப்படை தளத்தின் மீது நடத்திய தாக்குதலில் கணிசமான அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சேத விவரங்கள் குறித்த அறிய அங்கு செல்ல போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் கோரியபோது அதற்கு இலங்கை அரசு அனுமதி மறுத்து விட்டது. சேத விவரங்களை இலங்கை அரசு மறைத்து வருவதாக புலிகளும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், புலிகளின் விமானத் தாக்குதலால் ஆத்திரமடைந்த இலங்கை விமானப்படை, வடக்கில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சரமாரியாக குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் பலரது வீடுகள் சேதமடைந்தன. இருப்பினும் உயிரிழப்பு ஏதும் இல்லை.
இந்தியாவுக்கு ஆபத்து: இலங்கை
புலிகளின் விமானத் தாக்குதலால் இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் பேராபத்து ஏற்பட்டிருப்பதாக இலங்கை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுல்லே கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும், தெற்காசியாவுக்கும் தற்போது பேராபத்து ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications