காவிரி: வேதம் ஓதும் வெங்கய்யா நாயுடு
சென்னை:காவிரிப் பிரச்சினையில், கர்நாடகத்திற்கான ஆதரவாக பிரதமர் மன்மோகன் சிங்கைப் பார்த்து மனு கொடுத்த பாஜக தலைவர் வெங்கய்யா நாயுடு இப்பிரச்சினையில் பாஜகவின் நிலைப்பாடு வேறு வேறாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை கர்நாடக எம்.பிக்கள் குழு சந்தித்து, தீர்ப்பை அரசு கெஜட்டில் வெளியிடக் கூடாது என்று கோரி மனு கொடுத்தது. அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தவர் வெங்கய்யா நாயுடு.
நாயுடு, கர்நாடக மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்காக இதுவரை ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாத வெங்கய்யா, கர்நாடகத்துக்காக குரல் கொடுக்கத் தவறாதவர்.
டெல்லியில் பிரதமரிடம் மனு கொடுத்த கர்நாடகக் குழுவில் தைரியமாக கலந்து கொண்ட வெங்கய்யா இன்று சென்னை வந்திருந்தார். அப்போது காவிரிப் பிரச்சினை தொடர்பாக பாஜகவின் கொள்கை மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசமானதாக, வேறு மாதிரியாகத்தான் இருக்கும். இதில் தவறில்லை என்று தெரிவித்தார்.
வெங்கய்யா தொடர்ந்து பேசுகையில், கர்நாடக பாஜக, அந்த மாநிலத்துக்காகத்தான் குரல் கொடுக்கும். தமிழக பாஜக தமிழகத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கும். மத்திய அரசுதான் இரு மாநில அரசுகளையும் அழைத்துப் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
விடுதலைப்புலிகள் விவகாரத்தில் மத்திய அரசும், தமிழக அரசும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் தற்போது விமான பலத்தைப் பெற்றுள்ளனர். இது மிகவும் ஆபத்தானது.
இலங்கைப் பிரச்சினையில், கடந்த காலத்தில் ஏற்பட்ட அனுவபங்களைப் பாடமாகக் கொண்டு இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தருவது என்பது வேறு, ஈழத் தமிழர்களை ஆதரிப்பது என்பது வேறு. இந்த வேறுபாட்டை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையில் நிலவும் தன்மை, தமிழகத்திலும் எதிரொலிக்கும். விடுதலைப் புலிகளை ஆதரிப்போரிடம் அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார் வெங்கய்யா.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications