புலிகளின் விமான தாக்குதல்: இந்தியா கவலை
டெல்லி:விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது கவலை தரும் விஷயம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்ளிடம் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன் பேசுகையில், இலங்கையில் வன்முறை அதிகரித்து வருவது கவலை தருகிறது.
மனிதாபிமான சீர்குலைவு அங்கு அதிகரித்து வருகிறது. இது இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது. வன்முறை சீக்கிரம் முடிவுக்கு வர வேண்டும் என்று மற்ற நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் குரல் கொடுக்கிறது. விரைவில் சண்டை முடிவுக்கு வந்து சமாதானம் ஏற்பட விரும்புகிறோம்.
இந்தியா இலங்கைக்கு அளித்த ரேடார்கள், விடுதலைப் புலிகளின் விமானங்களை கண்டுபிடிக்கத் தவறி விட்டதாக கூறுவதில் உண்மை இல்லை. இந்திய ரேடார்கள் சரியில்லை என்ற கூற்றையும் ஏற்க முடியாது. ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக் கொண்டு மொத்தமாக சரியில்லை என்று கூறி விட முடியாது என்றார் மேனன்.
இலங்கக்கு ரேடார் உள்ளிட்ட கருவிகளை தரவில்லை என்று முதலில் மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் தற்போது இந்திய ரேடார்கள் சரியில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என மேனன் கூறியிருப்பதைப் பார்த்தால் இந்தியா ஏற்கனவே இலங்கைக்கு ரேடார்களை வழங்கியுள்ளது உறுதியாகிறது.
அதேசமயம், இந்தியா வழங்கிய ரேடார்கள் சரியில்லை என்று இலங்கை அதிகாரிகள் தற்போது அதிருப்தி தெரிவித்துள்ளதாக அங்குள்ள பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications