தீவிர போரில் குதிக்க ராஜபக் ஷே முடிவு:ரத்தாகிறது போர் நிறுத்தம்-மக்களிடம் கருத்துக்கணிப்பு
கொழும்பு:நார்வே மத்தியஸ்தத்தில் உருவான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்து விட்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக தீவிரப் போரில் குதிக்கு இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே முடிவு செய்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்வது தொடர்பாக நாடு தழுவிய அளவில் கருத்துக் கணிப்பு நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு நார்வே குழுவின் உதவியுடன், இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது. ராஜபக்ஷே அதிபர் பதவிக்கு வந்தது முதல் விடுதலைப் புலிகள் மீதான நடவடிக்கையை மிகத் தீவிரமாக்கினார்.
சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியானது. இருப்பினும் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை படையினருக்கும் இடையே முழு அளவிலான போர் வெடிக்கவில்லை. அதேசமயம், இரு தரப்பும் கடுமையாக மோதி வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதல், இலங்கை அரசை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் தமிழர் பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளுடனான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த வசதியாக, அமைதி ஒப்பந்தத்தை முழுமையாக கைவிட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது கருத்துக் கணிப்பு நடத்தி தீர்மானிக்க அவர் முடிவு செய்துள்ளோர். அதிபரின் இந்த முடிவுக்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக கைவிடப்பட்டால், பெரிய அளவிலான போர் வெடிக்கும், அது மிகப் பெரிய பேரழிவுக்கு வித்திடும், இலங்கையில் ரத்த ஆறு ஓடும் என விடுதலைப் புலிகள் அமைப்பு எச்சரித்துள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications