இட ஒதுக்கீடுக்கு ஆதரவாக ஆந்திராவில் பந்த்
ஹைதராபாத்:பிற்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை எதிர்த்து ஆந்திராவில் இன்று முழு அடைப்பு நடந்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. மக்களின் பேராதரவுடன் இந்தப் ேபாராட்டம் முழு வெற்றி அடைந்தது.
இந்த நிலையில் ஆந்திராவில் இன்று பந்த் நடத்தப்படுகிறது. காலை 6 மணிக்குத் தொடங்கிய பந்த்தால், அங்கு இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. பேருந்து, லாரி, ஆட்டோ, டாக்ஸி போக்குவரத்தும் அடியோடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பந்த் காரணமாக சட்டசைபயும் இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பந்த் காரணமாக, தமிழகத்திலிருந்து சென்ற பேருந்துகள், கிருஷ்ணகிரி அருகே எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல திருத்தணி, ஓசூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் பேருந்துப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications