கார்களைக் கொளுத்திய மர்ம நபர் சிக்கினார்
சென்னை:சென்னை நகரில் வீடுகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தி நகரையே பரபரப்பில் ஆழ்த்தியவர் குப்பை பொறுக்கும் இளைஞர் என்பது தெரிய வந்துள்ளது. அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை நகரில் அசோக் நகர், கே.கே.நகர், விருகம்பாக்கம், வடபழனி ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வீடுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், லாரிகள், ஆட்டோக்கள் ஆகியவை மர்மமான முறையில் தீவைத்து எரிக்கப்பட்டன.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியது. யார் இந்த செயலில் ஈடுபடுவது என்று தெரியாமல் போலீஸார் குழம்பி வந்தனர். மர்ம நபர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
![]() |
இந்த நிலையில், லிங்கேஸ்வர் நகர் என்ற பகுதியில், ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்ததை தனிப்படை போலீஸார் பார்த்து அவரை அணுகி விசாரித்தனர்.
போலீஸாரிடம் அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரைக் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்று விசாரித்ததில் அவர்தான் வாகனங்களைக் கொளுத்திய ஆசாமி என்பது தெரிய வந்தது.
அவரது பெயர் சையத் இப்ராகிம் (33). தெருக்களில் குப்பை பொறுக்கி பிழைத்து வருபவர். கடந்த 3 மாதங்களாக இப்படி வாகனங்களைக் கொளுத்தும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்த தகவல்கள்
இப்ராகிமின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆகும். அவரது பெற்றோர் தற்போது பட்டுக்கோட்டையில் வசிக்கின்றனர். தந்தை பெயர் அப்துல் மஜீத், தாயார் பெயர் சுபேதா.
15 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு சென்னைக்கு வந்துள்ளார் இப்ராகிம். பழைய பேப்பர், இரும்புப் பொருட்களை சேகரித்து விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்ந்து வந்தார்.
வடபழனி சிவன் கோவில் பிளாட்பாரம்தான் இவரது இருப்பிடமாக இருந்து வந்தது. பேப்பர் பொறுக்குவதில் போதிய வருமானம் கிடைக்காததால் அவ்வப்போது சிறு சிறு திருட்டிலும் ஈடுபட்டு வந்தார். இதுதொடர்பாக 6 முறை கைதாகி சிறைக்கும் சென்றுள்ளார்.
இப்ராகிமுக்கு சமையல் வேலையும் தெரியுமாம். சமையல்காரராக வேலை பார்க்கலாம் என முடிவு செய்து அந்த வேலைக்கு முயற்சித்துள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதனால் விரக்தியுற்றுத்தான் இப்படி வாகனங்களைக் கொளுத்தத் தொடங்கினாராம்.
திருடப் போகும் இடத்தில் பொருட்கள் இல்லாவிட்டால் அங்கு கொடியில் காயும் துணிகளை எரித்து விடுவாராம். இல்லாவிட்டால் கார் சீட்களை கத்தியால் குத்திக் குதறி விட்டுப் போவாராம். சில நேரங்களில் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டுப் போவாராம்.
இப்ராகிமுக்கு லேசான மன நல பாதிப்பும் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவரே போலீஸாரிடம் கூறியுள்ளார். அவருக்கு 18 வயது இருக்கும்போது, தனது பெரியப்பாவின் மகனும், மகளும் முறை கெட்ட உறவில் ஈடுபட்டுள்ளனர். அதை இப்ராகிம் பார்த்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பெரியப்பாவிடம் சொல்லியுள்ளார். இதுதொடர்பாக பெரியப்பா குடும்பத்துக்கும், இப்ராகிம் குடும்பத்துக்கும் சண்டை வந்துள்ளது. இதில் கோபமடைந்த இப்ராகிமின் தந்தை மகனை அடித்து வீட்டை விட்டு விரட்டியுள்ளார். அந்த கோபத்தில்தான் அவர் சென்னைக்கு வந்துள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் அவருக்கு லேசான மன நல பாதிப்பு ஏற்பட்டதாம்.
கைது செய்யப்பட்ட இப்ராகிமை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்













Click it and Unblock the Notifications