மானிய விலையில் பாமாயில் தருவீங்களா? ஜெ.
சென்னை:ரேஷன் கடைகளில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா ஆகியவை மானிய விலையில் தரப்படுமா அல்லது வெளிச் சந்தை விலையில் தரப்படுமா என்பதை முதல்வர் கருணாநிதி விளக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணையுடன், இனிமேல் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா ஆகியவையும் விநியோகிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இவை மானிய விலையில் விற்கப்படுமா அல்லது வெளிச் சந்தை விலையில் வழங்கப்படுமா என்பதை அரசு விளக்கவில்லை. வெளிச்சந்தை விலையில்தான் இப்பொருட்கள் வழங்கப்படும் என்றால் அதனால் நுகர்வோருக்கு என்ன பயன்?
இப்போது விலை உயர்வுதான் பிரச்சினையே தவிர, பொருட்களுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை. இனிமேல், இப்பொருட்களை வாங்கினால்தான் அரிசி, மண்ணெண்ணை, சர்க்கரை ஆகியவை விநியோகிக்கப்படும் என நுகர்வோர்கள் கட்டாயப்படுத்தப்படும் நிலை உருவாகும்.
மானிய விலையில் பொருட்களை வழங்கினால்தான் மக்களுக்குப் பலன் கிடைக்கும். ஆனால் கருணாநிதி அப்படி அறிவிக்கவில்லை.
எனவே பாமாயில், பருப்பு, ரவை, மைதா ஆகியவற்றை ரேஷன் கடையில் விநியோகம் செய்யப் போவதாக கருணாநிதி கூறியிருப்பது வெறும் கண் துடைப்பாகும். இதுவும் திமுக அரசின் இன்னொரு மோசடித் திட்டமாகும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications