விஜயகாந்த் மண்டபம்: 30ம் தேதிக்குள் காலி செய்தால்இடிப்புக்கு கால அவகாசம்-உயர்நீதிமன்றம்
சென்னை:ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தை வருகிற 30ம் தேதிக்குள் அமைதியான முறையில் அரசிடம் வழங்குவதாக உத்தரவாதம் கொடுத்தால், மண்டபத்தை இடிக்க கால அவகாசம் தரப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் பிரேமலதா விஜயகாந்த்துக்கு தெரிவித்துள்ளது.
கல்யாண மண்டபத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் புக் ஆகியுள்ளதால் அதுவரை மண்டபத்தை இடிக்க்க கூடாது என்று கோரி விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நேற்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரேலதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆகஸ்ட் 31ம் தேதி வரை கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மண்டபம் புக் செய்யப்பட்டுள்ளது. எனவே அதுவரை மண்டபத்தை ஒப்படைக்க கால அவகாசம் தர வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இதற்கெல்லாம் கால அவகாசம் தர முடியாது என்றனர். பின்னர் பேசிய பிரேமலதா வக்கீல், மண்டபத்தில் விலை உயர்ந்த பர்னிச்சர்கள், பொருட்கள் உள்ளன. அவற்றை எடுத்துச் செல்ல குறைந்தது ஒரு மாதமாவது தேவைப்படும். அந்த அனுமதியையயாவது கொடுங்கள் என்று கோரினார்.
அதற்கு நீதிபதிகள், ஏப்ரல் 30ம் தேதிக்குள் மண்டபத்தை அமைதியான முறையில், அரசிடம் ஒப்படைப்பேன் என்று பிரேமலதா விஜயகாந்த் உத்தரவாதம் வழங்க வேண்டும். அப்படி வழங்குவதாக இருந்தால் கால அவகாசம் கொடுத்து உத்தரவிடப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
திங்கள்கிழமைக்குள் இந்த உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications