சிவாஜி மது பார்ட்டி: போதை அதிகமாகிகுளத்தில் மூழ்கி சவுண்ட் என்ஜீனியர் பலி
இயக்குநர் ஷங்கரின் நீலாங்கரை பண்ணை வீட்டில் விடிய விடிய நடந்த மது விருந்தில், அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு நீச்சல் குளத்தில் விழுந்து சிவாஜி பட ஒலிப்பதிவாளர் (சவுண்ட் என்ஜீனியர்) சச்சிதானந்தம் பரிதாபமாக இறந்தார்.
சிவாஜி படத்தில் பணியாற்றிய அனைவரையும் மது விருந்துடன் தடபுடலாக கவனிக்க முடிவு செய்த இயக்குநர் ஷங்கர் தனது நீலாங்கரை, சின்னாண்டி குப்பத்தில் உள்ள பண்ணை வீட்டில் (வீட்டின் பெயர் ஷான் ஜி) புதன்கிழமை இரவு அதற்காக ஏற்பாடுகளை செய்தார். மது, விதம் விதமான உணவு வகைகளுடன் விருந்து ஏற்பாடுகள் படு அமர்க்களமாக இருந்தது.இரவு 7 மணி முதலே விருந்துக்கு அனைவரும் வர ஆரம்பித்தனர். ரஜினிகாந்த், ஷ்ரியா, ஏவி.எம். சரவணன், விவேக் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் லைட்பாய் வரையிலான அத்தனை பேரும் அங்கு கூடியிருந்தனர்.
8 மணிக்கு மேல் விருந்து ஆரம்பித்தது. நீச்சல்குளத்திற்கு அருகே உள்ள பிரமாண்ட புல்வெளியில், விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பஃபே முறையிலான இந்த விருந்தில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சாம்பெய்னும், பிற மது வகைகளும் தாராளமாக பரிமாறப்பட்டன. விருந்தில் கலந்து கொண்டவர்கள் மது ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி உற்சாகக் கரையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தனர்.
விவேக்தான் இந்த விருந்தின் முக்கியப் புள்ளியாக இருந்துள்ளார். சரக்கை அதிக அளவில் உள்ளே அனுப்பிய அவர் ரஜினியைப் பற்றியும், ஏவி.எம். சரவணன் பற்றியும் அவர்களை முன் வைத்துக் கொண்டே மற்றவர்களிடம் ஜாலியாக காமெண்ட் அடித்தாராம்.
சரவணன் 12 மணிக்கு மேல் கிளம்பி விட்டார். ஆனால் ரஜினி அதிகாலை 3.30 மணி வரை அங்கேயேதான் இருந்துள்ளார். கூடவே ஷ்ரியாவும், ஷங்கரும் பார்ட்டி முடியும் வரை இருந்துள்ளனர்.
அதன் பிறகுதான் ரஜினிகாந்த், ஷ்ரியா, ஷங்கர் உள்ளிட்டோர் கிளம்பிச் சென்றுள்ளனர். ஓவராக மது அருந்திய சிலர் இப்படியே கிளம்பினால் வீடு போய்ச் சேருவது சிரமம், எனவே இரவு இங்கேயே தங்கி விட்டுக் காலையில் போகலாம் என நினைத்து பண்ணை வீட்டிலேயே தங்கி விட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை பண்ணை வீட்டின் காவலாளி உள்ளே சுற்றி வந்து பார்த்துள்ளார். அப்போது நீச்சல் குளத்தில் ஒருவர் பிணமாக மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்ளை எழுப்பினார்.
அவர்கள் விரைந்து வந்து யார் மிதப்பது என்று பார்த்தபோது, ஒலிப்பதிவாளர் சச்சிதானந்தம்தான் பிணமாக மிதந்தது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால்தான் குளத்தில் விழுந்து சச்சிதானந்தம் இறந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. இருப்பினும் பார்ட்டியில் ஏதாவது கலாட்டா நடந்ததா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சச்சிதானந்தத்திற்கு வயது 41. கடந்த 20 வருடங்களாக ஒலிப்பதிவாளராக இருந்து வந்தார். இவருக்கு கோகிலா என்ற மனைவியும், ரேவதி, மைத்ரேயன் ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர்.
சச்சிதானந்தம் சாவு தொடர்பாக நீலாங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சச்சிதானந்தத்துடன் இரவு தங்கியிருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படவுள்ளது.
அளவில்லாத வகையில் மது விருந்து கட்டவிழ்த்து விடப்பட்டதே இந்த சோக சம்பவத்திற்குக் காரணம் என திரையுலகினர் புலம்புகின்றனர். அதிக அளவில் மது வகைகைளக் கொண்டு வந்து அடுக்கி வைத்து விட்டு எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம் என அவிழ்த்து விட்டால், யார்தான் அமைதியாக இருப்பார்கள்.
இப்படி மது விருந்து வைத்ததற்குப் பதில் பேசாமல் யூனிட்டார் அனைவருக்கும் ஏதாவது அழகான ஒரு பரிசைக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தால் இந்த சோக சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும். ஷங்கர் ஏற்பாடு செய்த பார்ட்டியால் ரஜினியின் பெயர்தான் கெட்டுப் போயுள்ளது என்று திரையுலகினர் கூறுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications