விழுப்புரத்தில் பயங்கரம்: கார் வெடித்து 20 பேர் பலி10 வீடுகள் தரைமட்டம்-50 பேர் காயம்
விழுப்புரம்:விழுப்புரம் அருகே ஜெலட்டின் குச்சிகளுடன் வந்த கார் வெடித்ததில், 20 பேர் உடல் சிதறி இறந்தனர். 10க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் ஒரு அம்பாசடர் கார் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் அருகே உள்ள செண்டூர் என்ற இடத்தில் அந்தக் கார் போனபோது திடீரென அதிலிருந்து புகை வரத் தொடங்கியது.
இதையடுத்து கார் நிறுத்தப்பட்டது. காரிலிருந்து புகை வருவதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காரை சூழ்நது கொண்டு தண்ணீர் ஊற்றி புகையை அணைக்க முயன்றனர்.
அப்போது பயங்கர சப்தத்துடன் அந்தக் கார் வெடித்துச் சிதறியது. இதில் காரை சூழ்ந்து நின்ற பொதுமக்களில் 25க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர். அந்த பகுதி முழுவதும் சிதறிய உடல்களாக காட்சி அளிக்கிறது.
இந்த பயங்கர சம்பவம் காரணமாக அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மர்மமான முறையில் வெடித்த காரில் 4 பெட்டிகள் நிறைய ஜெலட்டின் குச்சிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 100 ஜெலட்டின் குச்சிகள் இருந்துள்ளன.
அவற்றைக் கொண்டு வந்தவர்கள் யார் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் சரக டிஐஜி வன்னியபெருமாள் கூறுகையில், வெடித்து சிதறிய காரில் மொத்தம் 2 பேர் இருந்துள்ளனர்.
பாபு, சண்முகம் ஆகிய அந்த இருவரும், புதுச்சேரி, மணலிப்பேட்டை என்ற இடத்தில் உள்ள ஜெலட்டின் குச்சிகளை விற்கும் அங்கீகாரம் பெற்ற சேகர் என்பவரிடமிருந்து ஜெலட்டின் குச்சிகளை வாங்கியுள்ளனர்.
கல் குவாரிக்காக வாங்குவதாக அவர்கள் இருவரும் கூறியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மைலம் அருகே உள்ள தேனாலப்பாக்கம் என்ற இடத்தில் சேகர் ஜெலட்டின் குச்சிகளுக்கான கொடவுனை வைத்துள்ளார்.
அங்கு போய் ஜெலட்டின் குச்சிகளை வாங்கிக் கொண்டு தேனாலப்பாக்கத்திலிருந்து கிளம்பி 3 பேரும் வந்துள்ளனர். செந்தூர் கிராம சந்திப்பில், திண்டிவனம்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், அவர்களது வாகனம் வந்தபோது, காரிலிருந்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்த கிராம மக்கள் காரை நோக்கி கையைக் காட்டி நிறுத்தியுள்ளனர்.
காரை ஓட்டி வந்த பாபு உடனடியாக காரை நிறுத்தி விட்டு இறங்கினார். காரின் முன் பகுதியில் உள்ள பானட்டை திறந்து பார்த்துள்ளார். அவருக்கு சண்முகம் உதவியுள்ளார்.
அந்த சமயத்தில் கிராமத்தினர் ஜீப்பை சுற்றி சூழ்ந்து நின்று என்ன, ஏது என்று பார்த்துள்ளனர். அப்போது திடீரென ஜெலட்டின் குச்சிகள் வெடித்துள்ளன.
பக்கத்தில் சென்ற காரும் வெடித்தது:
இதில் ஒரு குழந்தை, நான்கு பெண்கள் உள்பட 20 பேர் பலியாகி விட்டனர். அந்த சமயத்தில் சாலையை கடந்து டாடா சுமோ காரில் சென்று கொண்டிருந்த இரு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் இந்த விபத்தில் இறந்து விட்டனர்.
காயமடைந்தவர்கள் திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஜிப்மர் மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்தனர் என்றார்.
வெடி விபத்து கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவுக்குக் கேட்டுள்ளது. ஒரு மைல் தொலைவில் இருந்தவர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்.
ராமதாஸ் ஆறுதல்
சம்பவம் குறித்து அறிந்ததும் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று திண்டிவனம் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு காயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,இறந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். இடிந்து போய் விட்ட வீடுகளை அரசே கட்டித் தர வேண்டும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications