வேளாங்கண்ணியில் சுனாமி புரளி-பதட்டம்நெரிசலில் பலர் காயம்-போக்குவரத்து பாதிப்பு
நாகை நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சுனாமி தாக்கப் போவதாக திடீரென கிளம்பிய பீதியால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேளாங்கண்ணியில் கடந்த 2004ம் வருடம் டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமியால் 6,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மறுநாள் கிறிஸ்துமஸ் என்பதால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் உயிர்ப்பலியும் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில், நேற்று புனித வெள்ளி என்பதால் வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு கோவிலில் அதிகமானோர் தங்கியிருந்தனர்.
எல்லோரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் சுனாமி வருகிறது ஓடுங்கள் என கத்திக் கொண்டே ஓடி வந்தது. இதனால் மக்கள் பதட்டமடைந்து ஓட ஆரம்பித்தனர். சிலர் எழுந்திருக்க முடியாமல் தவித்தனர். இதனால் சிலர் கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
இதையடுத்து சில வாலிபர்கள் கடலுக்குப் ேபாய் பார்த்து விட்டு திரும்பி வந்து, சுனாமி எதுவும் இல்லை, கடல் அமைதியாக காணப்படுகிறது. எனவே யாரும் பீதியடைய வேண்டாம் என மக்களை அமைதிப்படுத்த முயன்றனர். இருந்தாலும் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் பயந்தனர்.
இந்த செய்தி நாகை சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சுமார் 3 மணி நேரம் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
சுனாமி வருகிறது என கத்திக் கொண்டு ஓடி வந்தவர்கள் பிட்பாக்கெட் திருடர்கள் எனவும், மக்கள் ஓடும்போது பக்தர்களின் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததும் பின்னர் தெரிய வந்தது. இந்த விஷமக் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications