வீரர்களின் சம்பளம் குறைப்பு-சச்சினுக்குநோட்டீஸ்: விளம்பரங்களில் நடிக்க கட்டுப்பாடு
மும்பை:இந்திய அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் நீடிக்கிறார். பத்திரிகைகளில் சர்ச்சைக்குரிய பேட்டி கொடுத்ததற்காக சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் ஆகிேயாருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளு. வீரர்களின் சம்பளமும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. காண்டிராக்ட் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தோல்வி தொடர்பாக விவாதிக்க மும்பையில் கூடிய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 2வது நாள் கூட்டம் இன்றும் நடந்தது.
இன்றைய கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளை கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. இந்த முடிவுகளை வாரியத்தின் செயற்குழு கூட்ட முடிவுக்குப் பின்னர் ெபாருளாளர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் ெதரிவித்தார்.
அதன்படி வாரியம் எடுத்துள்ள முக்கிய முடிவுகள்.
- வீரர்களின் ஊதியம் தொடர்பாக தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் காண்டிராக்ட் முறை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
- வீரர்களின் சம்பளம் குறைக்கப்படுகிறது. இனிமேல் ஒரு நாள் போட்டியில் ஆடினால் ரூ. 1.85 லட்சமும், டெஸ்ட் போட்டியில் விளையாடினால் ரூ. 2.25 லட்சமும் வழங்கப்படும்.
- டெஸ்ட் அல்லது ஒரு நாள் தொடரை வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ. 3 லட்சம் பரிசாக அளிக்கப்படும்.
- ஒரு வீரர் ஒரு நேரத்தில் 3 விளம்பரதாரர்களின் விளம்பரங்களை மட்டுமே பிரபலப்படுத்தலாம்.
- போட்டிகளுக்கு 15 நாட்களுக்கு முன்பே விளம்பரப் படங்களில் நடித்து விட வேண்டும்.
- விளம்பரப் படங்களில் நடிப்பதாக இருந்தால் முன்கூட்டியே வாரியத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.
- மண்டலவாரியான தேர்வு முறை 2 ஆண்டுகளுக்குப் பின்னர் நீக்கப்பட்டு விடும்.
- வங்கதேசத்திற்கு டூர் செல்லும் இந்திய அணி முற்றிலும் இளம் வீரர்களைக் ெகாண்ட அணியாக இருக்கும்.
- வங்கதேச அணிக்கு மேலாளராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி செயல்படுவார்.
- பீல்டிங், பவுலிங்குக்கு தனித் தனி பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவர்.
- பீல்டிங் பயிற்சியாளராக ராபின்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பந்து வீச்சு பயிற்சியாளராக வெங்கடேச பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
- வங்கதேச சுற்றுப்பயணத்துக்கு ராகுல் டிராவிட் கேப்டனாக இருப்பார்.
- பத்திரிக்கை மற்றும் டிவிக்கு சர்ச்சைக்குரிய பேட்டி கொடுத்தற்கு விளக்கம் கேட்டு சச்சின், யுவராஜ் சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பபப்டும்.
- அனைத்து வீரர்களும் குறிப்பிட்ட அளவிலான உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும்.
- கேப்டன் மட்டுமே பேட்டி கொடுக்கலாம். மற்ற யாரும் பேட்டி தர தடை விதிக்கப்படுகிறது.
- ெபாதுவான தேர்வு முறை உடனடியாக அமல்படுத்தப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications