வெடி விபத்து: பலியானோர் குடும்பங்களுக்குரூ.1 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின்
விழுப்புரம்:விழுப்புரம் அருகே நடந்த கோர வெடிவிபத்தில் உயிரழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 1லட்சம் இழப்பீடு வழங்கப்படும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
விழுப்புரம் அருகே செந்தூரில் கோர வெடிவிபத்து நடந்த இடத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் திண்டிவனம் மருத்துவமனைக்குச் சென்ற அவர் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களைப் பார்த்து நலம் விசாரித்தார்.
முன்னதாக செந்தூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல காயமடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பபடும்.விபத்துக்குக் காரணமான வாகனத்தில் ஜெலட்டின், டெட்டனேட்டர்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆர்.டி.எக்ஸ் இல்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர் என்றார்.
ஜெயலலிதா ஆறுதல்
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்த்து நலம் விசாரித்தார், ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மிகவும் கொடுமையான சம்பவம் இது. அதிமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவம் எதுவும் நடைபெற்றதில்லை.
அதிமுக ஆட்சியில், நெடுச்சாலை ரோந்துப் பணியில் போக்குவரத்து போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் இதுபோன்ற கடத்தல் உள்ளிட்டவை இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.
நெடுஞ்சாலைத் துறையினரின் தவறால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் தலா ரூ. 25 ஆயிரம் நிதியும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிதியும் வழங்கியுள்ளேன் என்றார் ஜெயலலிதா.
இவர்கள் தவிர மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரும் சம்பவம் நடந்த கிராமத்திற்குச் சென்று பார்வையிட்டு காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
வெடிவிபத்தினால் செண்டூர் கிராமமே அதிர்ச்சியில் மூழ்கிக் கிடக்கிறது. பலத்த வெடிச் சப்தத்தால் பலரது காதுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பலருக்கு காது கேட்கவில்லை. எங்கு பார்த்தாலும் மரண ஓலமாக காட்சி அளிக்கிறது.
இந்த விபத்தில் மொத்தம் 16 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விவரம்
செண்டூரைச் சேர்ந்த முத்து (80), ஏழுமலை (40), முருகன் (40), ஆனந்தாயி (45), தனம் (80), அம்மு (15), சுந்தரராம ரெட்டியார், முத்துராம ரெட்டியார், சின்னத்துரை, சின்னப்ப தாஸ், சின்னதாஸ், பாபு, சணமுகம், சாந்தகுமார், ஜெயலலட்சுமி, ஜெயக்கொடி ஆகியோர்.
இவர்களில் முத்துராம ரெட்டியாரும், சுந்தரராம ரெட்டியாரும் அண்ணன், தம்பிகளாம்.
கோர விபத்துக்குக் காரணமா வெடிபொருட்களுடன் வந்த இருவரும் கூட இந்த விபத்தில் பலியாகி விட்டனர். முதலில் அவர்கள் தப்பி விட்டதாக கூறப்பட்டது.
-
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்?












Click it and Unblock the Notifications