வெடி விபத்து: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில்விசாரணைக் கமிஷன் - கருணாநிதி அறிவிப்பு
சென்னை:விழுப்புரம் அருகே நடந்த பயங்கர வெடிவிபத்து தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் அதிமுக, காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்தத் தீர்மானங்களைக் கொண்டு வந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலபாரதி ஆகியோர் பேசினர்.
பின்னர் முதல்வர் கருணாநிதி இவற்றுக்குப் பதில் அளித்துப் பேசுகையில்,
விழுப்புரம் அருகே நடந்த பயங்கர வெடிவிபத்து எதிர்பாராத நிகழ்ச்சி. வெடிவிபத்தில் சிக்கிய வாகனத்தில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க, வெடிபொருள் விற்பனைக்கான உரிமம் வழங்கும் உரிமையை மாநில அரசுகளிடம் வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம்.
இதை அரசியல் ஆக்கக் கூடாது என காங்கிரஸ், பாமக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதை அனைத்துக் கட்சிகளும் ஏற்க வேண்டும்.
இந்த சம்பவத்தையடுத்து எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் தடுக்கத் தேவையான நடவடிக்ககளை எடுக்க வசதியாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications