விழுப்புரத்தில் வெடித்தது ஆர்.டி.எக்ஸ்.: ஜெ.
சென்னை: விழுப்புரத்தில் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு ஒரு பயங்கவாதச் செயல். வெடித்தது ஆர்.டி.எக்ஸ். தான் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விழுப்புரம் அருகே செண்டூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கார் வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாதச் செயல்.
இது கடுமையான சேதத்தை ஏற்படுத்தி இருப்பதால், வெடித்தவை சாதாரண கல் உடைக்கிற வெடிபொருட்களாக இருக்க முடியாது. இது நிச்சயம் ஆர்டிஎக்ஸ் தான்.
எனது ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலை ரோந்து பணி என்ற திட்டத்தை ஏற்படுத்தியிருந்தேன். தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளை 80 பிரிவுகளாக பிரித்து 24 மணி நேரமும் காவல்துறையினர் ரோந்து பணியை மேற்கொள்வதற்காக, ஒரு பிரிவுக்கு 2 வீதம், மொத்தம் இதற்கென்றே 160 வாகனங்களை வழங்கி இருந்தேன்.
அந்த வாகனங்கள் எங்கே போனது? அந்த திட்டமே இப்போது கைவிடப்பட்டு உள்ளதா என்று தெரியவில்லை. இந்த நெடுஞ்சாலை ரோந்து பணி ஒழுங்காக நடைபெற்றிருந்தால் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தவிர்த்திருக்கலாம்.
இது போன்ற பயங்கரவாதச் செயல்களை மேலும் வளரவிடக் கூடாது. தொடரவிடக் கூடாது, மத்திய அரசு தனது கடமையை உணர்ந்து விரைந்து செயல்பட்டு, தமிழ்நாட்டை பேரழிவில் இருந்து மீட்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications