விடுதலைப் புலிகள் ஊடுறுவல் இல்லை - ஐ.ஜி
திருச்சி:தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ஊடுறுவல் இல்லை என்று மத்திய மண்டல போலீஸ் ஐஜி ஜாபர் சேட் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சமீபத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரும்புக் குண்டுகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய மண்டலத்திலும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக விமான நிலையத்தில் அதி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிரமாக நோட்டமிடப்படுகிறார்கள்.
மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 3 அடுக்கு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் தலா 14 காவலர்களைக் கொண்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, கிராம தொண்டர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, இலங்கை தமிழர்கள் குறித்த கணக்கெடுப்பும், பரிசோதனைகளும் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன.
மத்திய மண்டலத்திற்குட்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய மண்டலத்தில் மொத்தம் எட்டு அகதிகள் முகாம்கள் உள்ளன. இங்கு 2516 குடும்பங்களைச் சேர்ந்த 9016 அகதிகள் தங்கியுள்ளனர். இவை தவிர மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 999 குடும்பங்களைச் சேர்ந்த 3170 இலங்கைத் தமிழர்கள் வசிக்கிறார்கள்.
மத்திய மண்டலப் பகுதியில் விடுதலைப் புலிகள் அறவே இல்லை என்றார் சேட்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications