ஏழு ஆண்டுகளைத் தாண்டி...
அன்பு நண்பர்களே,
2007 ஏப்ரல் மாதத்துடன் நமது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இணையத் தளங்கள் தொடங்கப்பட்டு 7 கோலாகல வருடங்கள் நிறைவு பெறுகின்றன.
![]() |
நான்கு தென்னிந்திய மொழிகளையும் இணையதளத்தில் தீவிரமாக எடுத்துச் சென்றவர்கள் நாங்கள் தான். உங்களுக்கு சிறந்த சேவையை வழங்க அயராது உழைத்து வரும் அருமையான ஆசிரியர் குழுவினரை இந்த நேரத்தில் பாராட்டுகிறேன்.
அது மட்டுமல்லாமல், வாசகர்களாகிய நீங்கள் அனுப்பும் பீட்-பேக் மெயில்களும் உங்களது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும் எங்களை அவ்வப்போது சரி செய்து கொள்ள பெரும் உதவியாக இருந்தன.
இந்தியாவில் இந்திய மொழி இன்டர்நெட் வாசகர்கள் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி வரும் நிலையில் 2007ம் ஆண்டு இந்தியாவில் பிராட்பேண்ட் இயர் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நாளுக்காகத்தான் நாங்கள் காத்திருந்தோம்.
உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள தமிழர்களும் அதிக அளவில் எமது இணையதளத்திற்கு வருகை தருவதும், செய்திகளை வாசித்துச் செல்வதும் அதிகரித்து வருகிறது. இது எங்களுக்கு மிக மகிழ்ச்சி தரும் விஷயம்.
சில மாதங்களுக்கு முன்பு தான் யூனிகோட் எழுத்துருவுக்கு மாறுவது என்ற முடிவை எடுத்தோம். கடந்த வாரம் தட்ஸ்தமிழ் வெற்றிகரமாக யூனிகோடுக்கு மாறியது. இந்த மாற்றத்தை தட்ஸ்தமிழ் வாசகர்கள் மிகப் பெரும் ஆதரவோடு ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை தெரவித்துக் கொள்கிறேன்.
அடுத்த 2 மாதங்களில் எங்களது மற்ற மொழி இணையத் தளங்களும் யூனிகோடுக்கு மாறவுள்ளன.
நாங்கள் யூனிகோடுக்கு மாறவும், எழுத்துருவில் இருந்த பிரச்சனைகளை களையவும் பேருதவியாக இருந்த ஓபன்சோர்ஸ் யூனிகோட் ஃபான்ட் டெவலபர்களையும் குறிப்பாக, ஹைதராபாத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் Indian Languages Group of Advanced Technology Center அமைப்பினருக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறாம்.
நாங்கள் கடந்து வந்த 7 வருடங்களைத் திரும்பிப் பார்த்தால், பல சாதனைகள் கண்ணில் படுகின்றன. ஆனாலும் இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது என்பதையும் உணர்கிறோம். இன்னும் புதிதாக பல அம்சங்களை அறிமுகப்படுத்தப் போகிறோம். அவை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமே தவிர நிச்சயம் ஏமாற்றாது என நம்புகிறோம்.
நான்கு தென்னிந்திய மொழி தளங்களையும் மிகப் பெரிய உயரத்துக்குக் கொண்டு செல்ல பாடுபட்ட குழுவினருக்கு மீண்டும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களின் ஆதரவு தொடர்ந்து எங்களை அரவணைக்கட்டும்.
பி.ஜி.மகேஷ்
ஏப்ரல் 2, 2007
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்













Click it and Unblock the Notifications