மீனவர்களைத் திரட்டி பெரும் போராட்டம்: திருமா.

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து தமிழக மீனவர்களைத் திரட்டி விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சமீபத்தில் நடுக் கடலில் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து திருமாவளவன் தலைமையில், சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், இலங்கை கடற்படையின் போக்கைக் கண்டித்து விரைவில் தமிழக மீனவர்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

தமிழக மீனவர்கள் தங்களை இலங்கை கடற்படையினரிடமிருந்து தற்காத்துக் கொள்ள அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும்.

கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்டு இந்தியாவுடன் மீண்டும் இணைக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினார் திருமா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+