இலங்கை: ஓடும் பேருந்தில் தீ -19 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:இலங்கையில்யில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 19 பயணிகள் உடல் கருகி இறந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
இந்துருவா என்ற பகுதியில், ஒரு பேருந்து போய்க் கொண்டிருந்தது. அப்போது எதிரே பீர் ஏற்றிக் கொண்டு வந்த லாரி மீது பேருந்து மோதியது.
மோதிய வேகத்தில் பேருந்தில் தீப்பிடித்துக் கொண்டது. இதில், 19 பயணிகள் உடல் கருகி இறந்தனர். 58 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் பாலப்பிடியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications