வெடிவிபத்து-ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைப்பு
சென்னை:விழுப்புரம் அருகே செண்டூரில் நடந்த வெடிவிபத்து குறித்து விசாரிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், வருவாய் நிர்வாகத் துறை ஆணையருமான எம்.எஃப் பரூக்கி தலைமையிலான ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு நியமித்துள்ளது.
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என ஏற்கனவே முதல்வர் கருணாநிதி நேற்று காலை சட்டசபையில் தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக வருவாய் நிர்வாக ஆணையர் பரூக்கி இந்த விசாரணையை மேற்கொள்வார் என தமிழக அரசு நேற்று மாலை அறிவித்தது.
பரூக்கி தனது விசாரணையை ஒரு மாதத்திற்குள் முடித்து அறிக்கையை அரசிடம் வழங்குவார்.
வெடிபொருள் விற்பனை, சேமிப்பு, எடுத்துச் செல்வது, பயன்பாடு உள்ளிட்டவற்றில் நிலவும் குறைபாடுகளை இந்த கமிஷன் தீவிரமாக ஆராயும்.
இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்க எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக்குழு அரசுக்குப் பரிந்துரைக்கும்.
மேலும் செண்டூர் விபத்தில் இறந்த, படுகாயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு மற்றும் அவர்களது மறுவாழ்வுக்கான வழிமுறைகளையும் இந்தக் கமிஷன் பரிந்துரைக்கும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெடிவிபத்தினால் முழுமையாக அல்லது பாதியளவு சேதமைடந்த வீடுகளை சீரமைக்க ரூ. 25 லட்சம் நிதியை ஒதுக்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications