இன்டர்நெட் நட்பு: பெண்ணிடம் ரூ.20 லட்சம் மோசடி- தொழிலதிபர் கைது
சென்னை:இன்டர்நெட்டில் நட்புடன் பழகிய பின்னர் ரூ.20 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உணவு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வந்தவர் ராஜீவ் மேனன்(39).
இன்டர்ெநட்டில் சேட்டிங்கின்போது சென்னையைச் சேர்ந்த கணவரை இழந்த பெண்ணாண வழக்கறிஞர் இந்துவுடன் நட்பு ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்துப் பேசினர்.
கடந்த 2002ம் வருடம் முதல் சென்னையில் தங்கியிருந்த மேனன், இந்துவிடம் ரூ.2 லட்சம் கேட்டுள்ளார். அதை ஒரு வாரத்தில் திருப்பி கொடுத்துவிட்டார்.
அடுத்த சில நாட்களில் ரூ.8 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால், அதை திருப்பித் தரவில்லை.
இதே போல மையிலாப்பூரில் இன்டர்நெட் சென்டர் வைத்திருக்கும் தினேஷ் என்பவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதையும் திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார்.
இவர்கள் இருவரும் பணத்தை திருப்பி கேட்டதால் சென்னையில் தனது ஜாகையை காலி செய்து கொண்டு கொல்கத்தாவுக்கு சென்றுவிட்டார்.
பலமுறை பணம் கேட்டும் மேனன் பதில் தராததால், இந்து இதுகுறித்து போலீஸ் கமிஷ்னர் லத்திகா சரணிடம் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் கூடுதல் துணை கமிஷ்னர் சின்னதம்பி தலைமையிலான போலீஸார் கொல்கத்தா சென்றனர்.
அங்கு ராஜீவ் மேனனை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது ரேனா என்பவரிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி மேனன் ரூ.2 லட்சம் மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications