நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை:அரையிறுதிக்கு தகுதி பெற்றது
Subscribe to Oneindia Tamil
கிரெணடா:கிரெணடாவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி நியூசிலாந்தை தோற்கடித்தது இலங்கை.
சூப்பர் 8 போட்டியில் நேற்று இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
![]() |
இலங்கையின் வாஸ் பந்து வீச்சில் கேப்டன் பிளமிங்கும் ரோஸ் டெய்லர் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். பீட்டர் புல்டன் 27 ரன் எடுத்து அவுட்டானார். 77 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து.
![]() |
ஆனால் ஸ்டைரிஸ் மட்டும் பொறுமையாக விளையாடி சதம் அடித்தார். கடைசியில் நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்திருந்ததது.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் தரங்கா 11 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்ததாக வந்த ஜெயசூர்யாவும் சங்ககராவும் இணைந்து அபாரமாக விளையாடினர். நியூசிலாந்து உதிரி ரன்களை வாரி வழங்கியது. பீல்டிங்கும் படு மோசமாக இருந்தது.
![]() |
ஜெயசூர்யா அரை சதம் அடித்தார்.சங்ககரா 69 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி 45.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 222 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெட்டோரி ஜெயவர்த்தனாவை வீழ்த்தியது மூலம் தனது 200 விக்கெட்டை அடைந்தார்.
உலகக் கோப்பை போட்டியில் இதுவரை தோற்காமல் இருந்த நியூசிலாந்து, இதன் மூலம் முதல் தோல்வியை அடைந்துள்ளது.
மேலும் இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் இலங்கை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு















Click it and Unblock the Notifications