உச்ச நீதிமன்றம் செல்ல அதிமுக யோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:காவிரி பிரச்சனையை தீர்க்க உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இன்று முதல்வர் கருணாநிதி தலைமயில் நடந்த காவிரி அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் வழக்கறிஞர் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் அவர்கள் தெரிவித்த கருத்துகளை அதிமுக அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
காவிரி பிரச்சனையை தீர்க்க காலதாமதம் செய்யாமல் உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும். இதை தவிர்த்து மீண்டும் நடுவர் மன்றத்தை அணுகுவது அதிமுக எதிர்க்கிறது.
அதிக சட்டப் பிரச்சனைகள் உள்ள இந்த விஷயத்தில் நடுவர் மன்றத்தில் செல்லாமல் உச்சநீதிமன்றம் செல்வதுதான் தமிழக மக்களுக்கு நல்லது செய்யக் கூடிய விஷயமாகும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications