குணமடைந்தார் தனுஷ்கோடி ஆதித்தன்:கட்சிப் பணிகளுக்குத் திரும்புகிறார்
திருநெல்வேலி:சாலை விபத்தில் படுகாயமடைந்து வலது கரத்தை இழந்த முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் முழுமையாக குணமடைந்து நெல்லைக்குத் திரும்பினார். மீண்டும் முழு வீச்சில் கட்சிப் பணிகளில் ஈடுபடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி காரில் தனது மனைவி, மகள் ஆகியோருடன் போய்க் கொண்டிருந்த தனுஷ்கோடி ஆதித்தன் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் தனுஷ்கோடி ஆதித்தன் படுகாயமடைந்தார். அவரது மனைவி இந்திரா தேவி சம்பவ இடத்திலேயே பலியானார்.
![]() |
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தனுஷ்கோடி ஆதித்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் சேதமடைந்த தனுஷ்கோடியின் வலது கரம் அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு விட்டது.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தனுஷ்கோடி ஆதித்தன் முழு குணமடைந்து நெல்லை திரும்பினார். அங்கு ரயில் நிலையத்தில் அவருக்கு காங்கிரஸார் பெருமளவில் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தனுஷ்கோடி ஆதித்தன் பேசுகையில், 9 மாதங்களுக்குப் பிறகு மறு பிறவி எடுத்து வந்துள்ளேன். எனக்காக பிரார்த்திர்த்த அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.
நெல்லை மக்களுக்கு நான் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. எனது வலது கரம் போய் விட்டாலும் மக்கள் எனக்கு வலது கரமாக இருந்து ஆதரவு தருவார்கள்.
விரைவில் டெல்லி சென்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் கலந்து கொள்வேன். வருகிற 23ம் தேதி காமராஜர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் கட்சிப் பணிக்குத் திரும்புகிறேன் என்றார் தனுஷ்கோடி ஆதித்தன்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?













Click it and Unblock the Notifications