அமெரிக்க துப்பாக்கி சூடு-தமிழக பேராசிரியரும் பலி
பிளாக்ஸ்பர்க்:அமெரிக்காவின் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான பொறியியல் பேராசிரியர் ஜி.வி.லோகநாதன் (53) தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
விர்ஜீனியா டெக் பல்கலைகக்கழகத்தின் சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் லோகநாதன்.லோகநாதனுக்கு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம்தான் சொந்த ஊராகும். பலியான லோகநாதனுக்கு உஷா (46) என்ற மனைவியும், உமா (21), அபிராமி (12) ஆகிய மகள்களும் உள்ளனர். இவர்களுடன் லோகநாதன் அமெரிக்காவில் வசித்து வந்தார்.
திருச்சி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்த லோகநாதன், பின்னர் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் பி.டெக் படித்தார். அதன் பின்னர் கான்பூர் ஐஐடியில் மேல் படிப்பை முடித்த பின்னர் அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு பிஎச்டி பட்டம் பெற்றார்.
லோகநாதனின் அண்ணன் பழனிவேல் தமிழக மின்வாரிய அதிகாரியாக உள்ளார். இவரது தம்பி செங்காட்டு வேலு ஆடிட்டர் ஆவார். லோகநாதனின் மறைவையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் அமெரிக்கா விரைந்துள்ளனர்.
லோகநாதனின் அகால மரணத்தால் கரட்டடிபாளையம் கிராமம் முழுவதும் சோகம் சூழ்ந்துள்ளது. லோகநாதனின் வயதான தாயார் கண்ணம்மாள் மற்றும் உறவினர்கள் கதறியழுதவண்ணம் உள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு, சிறந்த ஆசிரியருக்கான, டபிள்யு.இ.வைன் விருதினையும் அவர் பெற்றுள்ளார்.
இவர் கடந்த 15 ஆண்டுகளாக விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விர்ஜீனீயா டெக் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடு, அங்கு படித்து வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் நிலை குறித்த தகவல்களை அறிய கீழ்க்காணும் இ-மெயில் முகவரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.
[email protected]
[email protected]
[email protected]
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications