மும்பை ஸ்டார் டிவி அலுவலகம் சூறை!
மும்பை:சூரத்தைச் சேர்ந்த காதல் ஜோடி குறித்த செய்தியை வெளியிட்டதற்காக இந்து ராஷ்டிர சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மும்பையில் உள்ள ஸ்டார் டிவி அலுவலகத்திற்குள் புகுந்து சூறையாடினர். அலுவலக ஊழியர்களையும் அவர்கள் தாக்கி, கார்களை சேதப்படுத்தினர்.
சூரத்தைச் சேர்ந்த இரு வேறு மதங்களைச் சேர்ந்த 22 வயது வாலிபரும், 16 வயதுப் பெண்ணும் வீட்டை விட்டு ஓடியது தொடர்பான ஒரு செய்தியை ஸ்டார் டிவி ஒளிபரப்பியது. சூரத்திலிருந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி வந்த கதையை அது விலாவாரியாக விளக்கியிருந்தது.
இந்த நிலையில், இந்து ராஷ்டிர சேனா என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 4 மணிக்கு மும்பையில் உள்ள ஸ்டார் டிவி அலுவலகத்திற்கு வந்தனர்.
அலுவலக காவலாளியை தாக்கி விட்டு உள்ளே புகுந்த அவர்கள் அலுவலகத்தை சூறையாடினர். அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை அடித்து நொறுக்கினர். ஸ்டார் டிவி செய்திப் பிரிவு செயல் தயாரிப்பாளர் சந்திரமோகன் பப்பாலா, உள்ளிட்ட ஊழியர்களையும் அவர்கள் தாக்கினர்.
இதுகுறித்து சந்திரமோகன் கூறுகையில், 70 முதல் 100 பேர் வரை உள்ளே புகுந்து கண்மூடித்தனமாக தாக்கினர். கைக்கு கிடைத்த பொருட்களையெல்லாம் போட்டு உடைத்தனர்.
சூரத் காதலர்கள் குறித்த செய்தியை இனிமேல் ஒளிபரப்பக் கூடாது. மீறி ஒளிபரப்பினால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என போகும் போது எச்சரித்து விட்டுச் சென்றனர் என்றார்.
இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் பி.ஆர். தாஸ் முன்ஷி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில அரசு உடனடியாக ஸ்டார் டிவி அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதல் நடந்த இடத்தை மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக 20 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications