அயர்லாந்தை புரட்டி எடுத்த இலங்கை:38 ஓவர்களில் போட்டியை முடித்து புது சாதனை!
செயின்ட் ஜார்ஜ்:அயர்லாந்து அணியை 77 ரன்களில் சுருட்டி, பின்னர் 10 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது இலங்கை. மேலும் மொத்தப் போட்டியும் 38 ஓவர்களில் முடிந்து புதிய சாதனையும் படைக்கப்பட்டது.
உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 8 சுற்றில் நேற்று இலங்கையும், அயர்லாந்தும் செயின்ட் ஜார்ஜில் சந்தித்தன.
பெரிய பெரிய அணிகளை மிரட்டி எடுத்த அயர்லாந்து அணி நேற்றையப் போட்டியிலும் இலங்கையை மிரட்டலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர் மாறாக அயர்லாந்து அணியை இலங்கை வீரர்கள் புரட்டி எடுத்து விட்டனர்.
![]() |
முதலில் அயர்லாந்து பேட்டிங் செய்தது. இலங்கை வீரர்கள் மெஹரூப், வாஸ் ஆகியோரின் ஆரம்ப கட்ட வேகப்பந்து வீச்சில் சிக்கி அயர்லாந்து வீரர்கள் அரண்டு போயினர். ரன் சேர்ப்பதற்குள் போதும்போதும் என்றாகி விட்டது.
குறிப்பாக மெஹரூப்பின் பந்து வீச்சில் அணல் பறந்தது. இதனால் தொடக்க நான்கு விக்கெட்டுக்கள் சடசடவென மெஹரூப் பந்து வீச்சில் விழுந்தன. அடுத்து வந்து சேர்ந்தார் சுனாமி முரளீதரன்.
வந்த வேகத்தில் சட் சட் என்று நான்கு பேரை அவுட்டாக்கி மேட்சை முடித்து வைத்தார் முரளீதரன். அவரது பந்து வீச்சில் இரண்டு பேர் டக் அவுட் ஆகினர். என்.ஓ. பிரையன் 4 ரன்களும், அவரது சகோதரர் கே.ஓ.பிரையன் 2 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில், 27.4 ஓவர்களிலேயே 77 ரன்களுக்கு அயர்லாந்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு பெர்முடா 78 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. அந்தப் போட்டியிலும் இலங்கைதான் ஆடியது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இலங்கை அணி பேட்டிங்கைத் தொடங்கியது. மிக குறைந்த ஸ்கோர் என்பதால், இலங்கை வீரர்கள் நிதானமாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வந்த வேகத்தில் ரன்களைக் குவித்து பத்தே ஓவர்களில் போட்டியை முடித்து விட்டது இலங்கை.
தொடக்க ஆட்டக்காரர் ஜெயசூர்யா 24 ரன்களும், கேப்டன் ஜெயவர்த்தனே 39 ரன்களும் எடுத்தனர். 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 81 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இலங்கை.
மொத்தப் போட்டியும் 38 ஓவர்களில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவும் ஒரு புதிய சாதனையாகும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்













Click it and Unblock the Notifications