சென்னையில் நள்ளிரவில் வீடு புகுந்து கொலை:கள்ளக் காதல்? -மனைவி மீது போலீஸ் சந்தேகம்
சென்னை:சென்னையில் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கட்டிடக்கலை நிபுணரை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று சராமாரியாக குத்தி கொலை செய்தது.
![]() |
சென்னை தரமணியை சேர்ந்த பார்த்தீபன் (35) ஆர்கிடெக்ட் (கட்டிடக் கலை நிபுணர்) ஆவார். இவரது மனைவி அபிராமி (25). இருவரும் தரமணி பெரியார் நகர் ராமசாமி தெருவில் வசித்து வந்தனர்.
நேற்றிரவு சுமார் 2.30 மணியளவில் 2 மர்ம நபர்கள் பார்த்தீபன் வீட்டு கதவை தட்டினர். அபிராமி கதவை திறந்தார். அப்போது அந்த மர்ம நபர்கள் அபிராமியின் கையில் கத்தியால் வெட்டினர். இதில் அவர் காயம் அடைந்து மயங்கி கிழே விழுந்தார்.
![]() |
![]() |
இதையடுத்து அந்த மர்ம நபர்கள் பார்த்தீபன் தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு சென்று அங்கு பார்த்தீபனை சராமாரியாக கத்தியால் குத்தினர். இதில் பார்த்தீபன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அபிராமி அணிந்திருந்த 5 பவுன் நகையை மட்டும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் பார்த்தீபன் வீட்டிற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபோட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடத்தற்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் காட்டமாக பார்த்தீபனின் மனைவியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அபிராமியின் 5 பவுன் நகையை மட்டும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதால் அபிராமி மீது போலீஸார் சந்தேகப்படுகிறார்கள். பார்த்தீபனுக்கு அபிராமிக்கு இடையே தகராறு ஏதாவது ஏற்பட்டு பார்த்தீபன் கொல்லப்பட்டிருக்கலாமா அல்லது கள்ளக் காதல் காரணமா என போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!














Click it and Unblock the Notifications