தேசிய பாதுகாப்பு துணை செயலாளராக லீலா
Subscribe to Oneindia Tamil
டெல்லிநாட்டின் துணை பாதுகாப்பு ஆலோசகராக லீலா பொன்னப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கேரளத்தைச் சேர்ந்த நாராயணன் உள்ளார். இந் நிலையில் மூத்த ஐஎப்எஸ் அதிகாரியான லீலா பொன்னப்பா துணை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகள் அவர் இப் பதவியில் நீடிப்பார்.
தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராகவும் அவர் இருப்பார்.
1970ம் ஆண்டு பேட்சை சேர்ந்த லீலா கடந்த ஜூன் மாதம் தான் ஓய்வு பெற்றார். நெதர்லாந்து உள்பட பல நாடுகளில் தூதராக இருந்துள்ளார். வெளியுறவுத்துறையில் வங்கதேசம், இலங்கை, மியான்மார் ஆகிய நாடுகளுக்கான பொறுப்பாளராகவும் இருந்துள்ளார்.












Click it and Unblock the Notifications