மகளிடம் அசிங்கம்: கணவரைக் கொன்ற மனைவி விடுதலை
செனனை:பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த காமவெறி பிடித்த கணவரைக் கொன்ற மனைவியை சென்னை பூந்தமல்லி நீதிமன்றம் விடுதலை செய்தது.
சென்னை ஆவடி அருகே உள்ள பூம்பொழில் நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி (45). இவருக்கு சாந்தி (35) என்ற மனைவியும், ஒரு மகன், மகள் ஆகியோர் உள்ளனர்.
தினசரி குடித்து விட்டு வந்து மனைவி குழந்தைகளை அடித்து நொறுக்குவார் முனியாண்டி. மனைவியிடம் தினசரி செக்ஸ் சித்திரவதையும் செய்வாராம். மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் காமவெறி தலைக்கேற பெற்ற மகளையே பாலியல் பலாத்காரமும் செய்து வந்துள்ளார்.
இதை அறிந்த சாந்தி அதிர்ச்சி அடைந்தார். கடந்த 2001ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி காமவெறி பிடித்த தனது கணவரை அடித்துக் கொன்றார் சாந்தி. பின்னர் அவரது உடலைப் புதைத்து விட்டு கணவரைக் காணவில்லை என போலீஸில் புகார் கொடுத்தார்.
விசாரணையில் சாந்திதான் கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அவருக்கு உடந்தையாக இருந்ததாக ரமேஷ், நந்தா என்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 3 பேர் மீதான குற்றச்சாட்டுக்கும் நேரடி சாட்சியங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications