ஹூஸ்டன்: நாசா விண்வெளி மையத்தில் பொறியாளர்சுட்டுக் கொலை- கொலையாளியும் தற்கொலை
ஹூஸ்டன்:அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மைய வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த காண்ட்ராக்ட் ஊழியர் ஒரு பொறியாளரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகிலேயே உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ள பகுதியாக கருதப்படுவது நாசா அமைப்பு. ஹூஸ்டனில் உள்ள இந்த அமைப்பின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மைய வளாகத்திற்குள் நேற்று மாலை ஒரு நாசா காண்ட்ராக்ட் ஊழியர் துப்பாக்கியுடன் நுழைந்தார்.
இதனால் ஜான்சன் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மையத்தின் நுழைவாயில்கள் மூடப்பட்டன. மையத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
அந்த நபர் இருந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். ஆனால் அதற்குள் ஒரு பெண் நாசா ஊழியர் மற்றும் ஒரு பொறியாளரை அந்த நபர் பிணையக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டார்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல், பாதுகாப்புப் படையினர் அந்த நபரை நெருங்கியதால், பீதியடைந்த அந்த நபர் பிணையக் கைதிகளில் ஒருவரை சுட்டுக் கொன்றார். பின்னர் தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பிணையக் கைதியாக பிடிக்கப்பட்ட பெண் எந்த விதக் காயமும் இன்றித் தப்பினார்.
எதற்காக அந்த காண்ட்ராக்ட் ஊழியர் இந்த தாக்குதலை நடத்தினார் என்று தெரியவில்லை.
சில நாட்களுக்கு முன்புதான் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வளாகத்தில் தென் கொரிய மாணவரின் வெறிச் செயலுக்கு 32 பேர் பலியானார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நாசாவுக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் புகுந்தது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications