100 கோடி பேரின் ஜாதகத்தை 2 பேர் நிர்ணயிப்பதுஜனநாயக கேடு: கருணாநிதி
சென்னை:100 கோடி பேரின் ஜாகதத்தை 2 அல்லது 3 பேர் சேர்ந்து நிர்ணயிப்பது என்பது ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய கேடு என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது குறித்து பல்வேறு உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்களைக் ெகாண்டு வந்து பேசினர்.
இதற்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில், நீதிக்கட்சி காலம் முதல் இன்று வரை இட ஒதுக்கீடு பல இன்னல்களை சந்தித்து வந்திருக்கிறது.
ஜனநாயகத்தில் 100 கோடி பேரின் ஜாகதத்தை 2 அல்லது 3 பேர் நிர்ணயிக்கக் கூடாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய கேடு, தீங்கு, பெரும் தீமை என்பதை உலகத்திற்கு அறிவித்தாக வேண்டிய நிலையில் உள்ளேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்று கேட்டார்.
மேலும் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம், நீங்கள் அதற்கு ஆதரவு தர வேண்டும் என்று அவர் கேட்டார். அதற்கு போராட்டம் என்றால் எல்லோரும் சேர்ந்தே ஆரம்பிப்போம் என்று நான் சொன்னேன். இதையடுத்து நான் பிரதமர், மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங், பரத்வாஜ், சோனியா காந்தி ஆகியோருக்கு கடிதம் ஒன்று எழுதினேன்.
அதில் நான் குறிப்பட்டதை தான் ராமதாஸ் அவர்களும் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார். தற்போது உச்சநீதிமன்றத்தின் தடை ஆணையை ரத்து செய்ய கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
எனவே நமக்குள்ள ஒரே வழி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் உடனே கூட்டி விரிவாக விவாதித்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டிற்கு எவ்வித பின்னடைவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் எனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன். அதை தான் ராமதாஸ் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே நாடு முழுவதும் இருக்கின்ற நலிந்தோர், அடக்ககப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், நான்காம் ஜாதி, ஜந்தாம் ஜாதி என தள்ளப்பட்டோர் எரிமலையாக மாறாமல் இருக்க, உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு மத்திய அரசு வழி காண வேண்டும் என்றார் கருணாநிதி.
முன்னதாக ஜெயா டிவிக்கும், ஜெயலலிதாவுக்கும் வந்த மிரட்டல் கடிதம் குறித்து கருணாநிதி விளக்குகையில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே அவருக்கு நிறைய மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. தற்போது வந்துள்ள மிரட்டல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவருக்குரிய பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications