ஜேசுதாஸை கோவிலுக்குள் நுழைய விடாமல்தடுப்பதா?-தந்திரி மீது மந்திரி பாய்ச்சல்!
திருவனந்தபுரம்: பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என அக்கோவிலின் தந்திரி கூற முடியாது.அதற்கு அவருக்கு உரிமை இல்லை என்று கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவரான ஜேசுதாஸ், அய்யப்பன் மீதும், கிருஷ்ணன் மீதும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக அவர் அய்யப்பன் குறித்து பாடிய பாடல்கள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடமும், மலையாளிகளிடமும் புகழ் பெற்றவை.
அப்படிப்பட்ட ஜேசுதாஸ், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குள் நுழைய அந்த கோவில் தேவஸ்தானம் மறுத்து வருகிறது. இதனால் ஜேசுதாஸால் கிருஷ்ணன் கோவிலுக்குள் போய் சாமியை தரிசிக்க முடியாத நிலை நிலவுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜேசுதாஸ் குருவாயூர் கோவிலுக்கு சென்றார். ஆனால் அவரை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என குருவாயூர் கோவில் தந்திரி கூறி விட்டார். இதனால் ஜேசுதாஸ் சாமியை கும்பிடாமல் திரும்பினார்.
கேரளாவில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோவிலுக்குள் யாரை அனுமதிக்கலாம், அனுமதிக்க கூடாது என்ற உரிமை தந்திரிக்கு இல்லை என அமைச்சர் சுதாகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
யார், யார் கோவிலுக்குள் போக வேண்டும், யார், யார் கோவிலுக்குள் போக கூடாது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தந்திரிக்கு கிடையாது.
பூஜை போன்ற காரியங்களில் தான் தந்திரிகள் வாக்கு இறுதி வாக்காக இருக்க வேண்டும். ஆனால் ஆச்சாரம் என்பது காலத்துக்கு ஏற்ப மாறுபடும். அதன்படி சமூகத்தின் அபிப்பிராயத்தை கேட்டு அரசுதான் யாரை கோவிலுக்குள் அனுப்பவது என முடிவெடுக்கும்.
ஜேசுதாசை கோவிலுக்குள் அனுமதிக்க நான் தேவசம் போர்டுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். ஆனால் அக்கடிதம் இன்று வரை அப்படியே இருக்கிறது. அதற்குப் பதில் இல்லை.
ஆனால் பிரச்சனைக்கு மத்தியில் நான் கோவிலுக்குள் செல்ல விரும்பவில்லை என் ஜேசுதாஸ் கூறியுள்ளார். அவரை கட்டாயப்படுத்தி கோவிலுக்குள் அனுப்ப முடியாது என்பதால் தற்காலிகமாக இந்த பிரச்சனையை நிறுத்தி வைத்துள்ளேன்.
ஜேசுதாஸ் குருவாயூர் கோவிலுக்கு செல்ல 90 சதவீத மக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். குருவாயூரப்பன் மீது நம்பிக்கை கொண்ட ஜேசுதாசை கோவிலுக்குள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என அவர் கூறியுள்ளார்
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications