நான் பிரியங்கா காந்தி அல்ல!
சுல்தான்பூர் (உ.பி.)என்னை யாரும் பிரியங்கா காந்தி என்று கூப்பிட வேண்டாம். பிரியங்கா வதேரா என்றே கூப்பிடுங்கள் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா கூறியுள்ளார்.
உ.பி. மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரியங்கா தீவிரப் பிரசாரத்தில் குதித்துள்ளார். சுல்தான்பூர் மாவட்டம் திஹ் என்ற கிராமத்தில் அவர் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார்.
அப்போது திரளாக கூடியிருந்த கிராமத்தினர் மத்தியில் பிரியங்கா பேசுகையில், என்னை யாரும் பிரியங்கா காந்தி என்று கூப்பிடாதீர்கள். பிரியங்கா வதேரா என்றே கூப்பிடுங்கள் (பிரியங்காவின் கணவர் பெயர் ராபர்ட் வதேரா என்பது குறிப்பிடத்தக்கது).
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், ஜாதி அரசியலுக்கு விடை கொடுப்பதை மனதில் கொண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள்.
சிறு வயதிலிருந்து இந்தக் கிராமத்திற்கு நான் பலமுறை வந்து போயுள்ளேன். ஆனால் இப்போது எனது குழந்தைகளுடன் இந்த கிராமத்திற்கு வந்துள்ளேன். இது பெருமையாக உள்ளது என்றார் பிரியங்கா.
பிரியங்காவின் எளிமையான பேச்சும், எளிமையான தோற்றமும் கிராமத்தினரை வெகுவாகக் கவர்ந்து விட்டது. குறிப்பாக அந்தக் கிராமத்துப் பெண்கள் பிரியங்காவின் பேச்சை கைதட்டி வரவேற்று ரசித்தனர்.
-
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications