மண்டபம் அருகே கரையொதுங்கியசக்தி வாய்ந்த வெடிகுண்டுகள்
ராமேஸ்வரம்:மண்டபம் கடல் பகுதியில் பயங்கர சேதத்தை விளைவிக்கும் தன்மை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் அடங்கிய தெர்மகூல் பெட்டி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு கடத்தப்பட்ட வெடிகுண்டு பார்சல்களிலிருந்து இது தவறி கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தமிழகத்தில் சமீப காலமாக ஆயுதக் கடத்தல் அதிகரித்து வருகிறது. புலிகளுக்காக பலர் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இலங்கையில் தற்போது புலிகள் விமான பலமும் பெற்று இருமுறை தாக்குதலும் நடத்தி விட்டதால் கடலோரப் பகுதியில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மண்டபம் கடல் பகுதியில் நேற்று ஒரு தெர்மகூல் பெட்டி கரை ஒதுங்கியது. மண்டபம் அகதிகள் முகாமுக்கு அருகே இந்த பெட்டி கரை ஒதுங்கியது.
இதையடுத்து காவலர் கார்த்திகேயன் அதை எடுத்துப் பார்த்தார். அப்போது அதில், 5 வெடிகுண்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தார். உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.
மாவட்ட எஸ்.பி.திருஞானம் உடனடியாக விரைந்து வந்தார். வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்தனர். 10 அங்குல நீளம், 2 அங்குல அகலம் கொண்ட அந்த வெடிகுண்டுகள், தற்கொலைப் படையினர் உடலில் கட்டிக் கொள்ளும் வகையிலான குண்டுகள் ஆகும்.
இதுதவிர ராக்கெட் லாஞ்சர் மூலம், ரிமோட் கண்ட்ரோல் மூலமும் வெடிக்க வைக்கலாமாம். மிகவும் சக்தி வாய்ந்த இந்த குண்டு வெடித்தால் மிகப் பெரிய அளவுக்கு உயிர்ச் சேதம் ஏற்படுமாம்.
வெடிகுண்டுகள் இன்னும் செயலிழக்காத நிலையில் உள்ளன. எனவே அவற்றை வெளியே எடுத்து ஆய்வு செய்யும் முடிவை நிபுணர்கள் கைவிட்டனர். பின்னர் வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கச் செய்யும் நிபுணர் குழுவுக்குத் தகவல் தரப்பட்டு அக்குழுவினர் மதுரையிலிருந்து மண்டபம் விரைந்தனர்.
பின்னர் வெடிகுண்டுகளைச் சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. பொதுமக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர் வெடிகுண்டுகள் இருந்த பெட்டியில் பிளாஸ்டிக் நூலை கட்டி கிட்டத்தட்ட 15 மீட்டர் தூரத்திற்கு அப்பால் நின்று கொண்டு அந்த நூலை அசைத்தனர். ஆனால் குண்டு வெடிக்கவில்லை. இதையடுத்து அந்த குண்டுகள் செயலிழந்தைவயாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் அந்த குண்டுகள் மண்டபம் கடலோரக் காவல் படை ஹெலிகாப்டர் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மிக மிக சக்தி வாய்ந்த குண்டுகள் சிக்கியதால் மண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பும், பீதியும் நிலவியது. மண்டபம் முகாமுக்குள் உள்ள பள்ளிக்கூடம் விடுமுறை விடப்பட்டு குழந்தைகள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
அகதிகள் அருகே குண்டுகள் கரை ஒதுங்கியதால் இந்த சம்பவத்தில் அகதிகள் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications