தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம்: காங்.
சென்னை:தமிழகத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது அதை தடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று காவல் துறையின் மானிய கோரிக்கையில் கலந்து கொண்ட சுதர்சனம் பேசியதாவது,
தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. அதனால் தான் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு ஏராளமான கம்பெனிகள் தமிழகத்திற்கு வருகின்றனர்.
தமிழ் மண்ணில் ராஜீவ் காந்தி உயிரிழந்தால் விடுதலைப்புலிகள் மீது எங்களுக்கு அதிருப்தி உண்டு.
இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ வேண்டும். அதற்காக தமிழ்நாட்டின் அமைதி பாதிக்கப்படக்கூடாது. சமீபத்தில் இவர்களுக்காக நடந்த ஆயுதக்கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதக் கடத்தல் இலங்கை அகதிகள் மூலம் கடத்தப்படுகிறது.
விடுதலைப்புலிகள் ஆயுதம் கடத்துவதை தடுக்க வேண்டும். தமிழகத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேற்று மண்டபம் அகதிகள் முகாமிற்கு பின்புறம் தெர்மாகோலில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தீவிரவாதத்தை தடுக்க முதல்வர் கருணாநிதி தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இருந்தாலும் மேலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து போலீசார் நடு ரோட்டில் வண்டியை நிறுத்தி பணம் வசூலிப்பை நாளிதழில் படத்துடன் காட்டுகின்றனர். இப்படி தப்பு செய்கின்ற அதிகாரிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஒரு சில அதிகாரிகளின் தவறால் ஒட்டு மொத்த காவல் துறையின் மரியாதையும் குறைகிறது.
கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருப்பது போல தமிழகத்திலும் பெண் போலீஸாருக்கு புடவையை சீருடையாக வழங்க வேண்டும் என்றார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications