லாரி மீது ரயில் மோதல்: ஒருவர் பலி-10 ரயில் பயணிகள் காயம்
சென்னை:சென்னை எண்ணூர் அருகே ரயில் மீது லாரி மோதியதில் ஒருவர் கால் ஒடிந்து பலியானார். பல ரயில் பயணிகள் காயமடைந்தனர்.
பீகாரிலிருந்து கேரளாவிற்கு செல்லும் ஸ்டீல் சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை எண்ணூர் அருகே வந்துக் கொண்டிருந்தது.
இங்கு துறைமுகத்துக்கு சரக்குகள் ஏற்றி செல்வதற்காக புது தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. அதனால் பழைய தண்டவாளம் உயரத்திற்கு மணல் கொட்டப்பட்டு வருகிறது.
அப்போது ஒரு லாரி மணல் கொட்டிவிட்டு திரும்பும் போது மணலில் சிக்கிக் கொண்டது. பல முறை முயன்றும் லாரியை எடுக்க முடியவில்லை.
இந்த நேரத்தில் ரயில் வேகமாக வந்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த லாரி டிரைவரும், கிளீனரும் லாரியிலிருந்து குதித்தனர்.
அப்போது வேகமாக வந்த ரயில் லாரியின் முன்புறத்தை வேகமாக உரசியபடி சென்றது. இதனால் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்திருந்த ஆனந்த்(30) என்ற பயணி கால் ஒடிந்து விழுந்தார். தலையிலும் பலமாக அடிப்பட்டதால் அதே இடத்தில் உயிரிழந்தார்.
ரயில் உரசியபடி சென்றதில் ரயில் பெட்டியின் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த 10 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.
இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. இதில் காயம் அடைந்தவர்கள் அனைவரையும் சென்னை பொது சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். ரயில்வே உயர் அதிகாரிகளும் சென்று பார்வையிட்டனர்.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications