நுழைவுதேர்வு தீர்ப்பு தலைவர்கள் வரவேற்பு
சென்னை:தமிழகத்தில் தொழிற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
தீர்ப்பை வரவேற்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 1984ம் ஆண்டிலிருந்தே நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வருகிறோம். அதற்காக போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.
எங்களது கோரிக்கை இப்போதுதான் நிறைவேறியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. கடந்த ஆட்சியின்போது இரண்டு முறை நுழைவுத் தேர்வை ரத்து செய்ததாக அறிவித்தார்கள். ஆனால் அது கண் துடைப்பு நடவடிக்கை.
ஆனால் தற்போது திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி உறுதியான முறையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் கருணாநிதியையும், தமிழக அரசையும் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் பால் வார்த்தது போல தீர்ப்பு வந்துள்ளது. கடந்த ஆட்சியில் அரைகுறையாக பிறப்பிக்கப்பட்ட ஆணையாக இல்லாமல், இந்த முறை முதல்வர் கருணாநிதி நிபுணர் குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் பேரில் முறைப்படி சட்டமாக கொண்டு வந்தார் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications