அரசியல் நாகரீகம் இல்லையே .. கருணாநிதி வேதனை
சென்னை: தமிழகத்தில் அரசியல் நாகரீகம் சுத்தமாக இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா நிறுவனத்தின் பிரிட்டானியா கன்சைஸ் என்சைக்ளோபீடியா என்ற ஆங்கில தகவல் களஞ்சியத்தை விகடன் குழுமம் தமிழில் மொழி பெயர்ந்து வெளியிட்டுள்ளது.
இதை முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு வெளியிட்டார். முதல் பிரதியை சக்தி குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெற்றுக்கொண்டார்.
கருணாநிதி நிகழ்ச்சியில் பேசுகையில், தமிழ்க் குடும்பத்தில் ஒரு தகவல் களஞ்சியத்தை வெளியிடுகிறார்கள் என்றால் நான் ஆச்சரியப்படவில்லை. இவர்கள் வெளியிடாவிட்டால் தான் ஆச்சரியப்பட்டிருப்பேன்.
நான் விகடனை தாக்கிப் பேசுவதும், விகடன் என்னைத் தாக்கி எழுதுவதும் சகஜம். நான் அவர்களை விமர்ச்சித்திருக்கிறேன். இதற்கெல்லாம் அடிக்கடி நான் சொல்வதைப் போல, அண்ணா சொன்னதைப் போல, மூத்த தலைவர்கள் சொல்வதைப் போல இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு அரசியல் நாகரீகம், பண்பாடு இருக்க வேண்டும். ஆனால் இப்போது அரசியல் நாகரீகம் இல்லை.
சட்டசபையில் பேசும்போது நான் யார் யாருடன் அரசியல் நடத்தியுள்ளேன் என்று சொன்னேன். இந்திராகாந்தி, காமராஜர், பக்தவத்சலம், எம்ஜிஆர் ஆகியோருடன் அரசியல் நடத்தியுள்ளேன். இப்போது என் கதி இப்படியா ஆகும் என கண் கலங்க நான் சொல்ல, மற்றவர்கள் அத்தனை பேரும் கண் கலங்கினார்கள். என்ன காரணம்? அந்த பண்பாட்டை நாம் இழந்துவிட்டோம்.
இந்த விழாவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்ல விரும்புகிறேன். மூன்று புத்தகங்களின் விலை ரூ. 4 ஆயிரம். ஏப்ரல் 30ம் தேதிக்குள் வாங்குபவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் என்ற அளவில் சலுகை விலையில் வாங்கிக் கொள்ளாம் என்று இதன் பதிப்பாளர் சீனவாசன் தெரிவித்தார்.
இதையடுத்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவிடமும், பொன்முடியிடமும் ஏப்ரல் 30 வரை காத்திருக்காமல் அதற்கு முன்னதாகவே நமக்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். எத்தனை புத்தகம் வாங்க வேண்டும் என்று நீங்களே அறிவித்துவிடுங்கள் என்று அவர்கள் கூறினார்கள்.
உயர்கல்வித் துறை சார்பில் கல்லூரி நூலகங்களில் வைப்பதற்காக 500 படிகள், அதாவது 500 காப்பிகள். மூன்று நூல்கள் சேர்ந்தது ஒரு படி. பள்ளிக் கல்விக் துறை சார்பில் பொது நூலகங்களில் வைப்பதற்காக 1000 படிகள் வாங்கப்படும்.
1,500 புத்தக படிகள் அதாவது மொத்தம் 4500 புத்தகங்கள் தமிழக அரசு சார்பில் வாங்கப்படும் என்று தெரிவித்து உடனே நடைமுறைக்கு வரும் என்று உறுதி அளிக்கிறேன். இந்த புத்தகங்கள் நாளைக்கே வாங்கப்படும் என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications