பாஜக ஆட்சிக்கு வருவதில் சிக்கல்-பாஜக ஆட்சிக்கு வருவதில் சிக்கல்- குமாரசாமிக்கு காங். திடீர் ஆதரவு
பெங்களூரு:கர்நாடக முதல்வர் குமாரசாமி தொடர்ந்து அப்பதவியில் நீடிக்க காங்கிரஸ் ஆதரவு தரும் என அக்கட்சி திடீரென அறிவித்துள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தற்போது தேவே கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளமும், பாஜகவும் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன.
இரு கட்சிகளும் செய்து கொண்ட உடன்பாட்டின்படி வரும் அக்டோபர் மாதம் வரை மதச்சார்பற்ற ஜனதாதளம் முதல்வர் பதவியை வகிக்கலாம்.
அதன் பின்னர் முதல்வர் பதவியை பாஜகவுக்கு தர வேண்டும்.
ஆனால் முதல்வர் பதவியை பாஜகவுக்கு தருவதில்லை என்ற முடிவுக்கு கெளடா வந்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக பாஜக மீது சமீப காலமாக உரசல் போக்குடன் செயல்பட ஆரம்பித்துள்ளார் கெளடா.
இந் நிலையில், குமாரசாமி தொடர்ந்து முதல்வராக நீடிக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தரும் என அம்மாநில முன்னாள் முதல்வர் தரம்சிங் கூறியுள்ளார்.
இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் தரம்சிங் பேசுகையில், மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது.
குமாரசாமி தொடர்ந்து முதல்வராக இருக்கலாம். இதை காங்கிரஸ் ஆதரிக்கும், வரவேற்கும் என்றார் தரம்சிங்.
இதன்மூலம் கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட காங்கிரஸ் முயல்வது அப்பட்டமாகியுள்ளது.
தரம்சிங் ஆட்சியைக் கவிழ்த்து விட்டுத்தான் குமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது என்பது நினைவிருக்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications