புலிகள்: வைகோ மீது நடவடிக்கை கோரிகருணாநிதியுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு
சென்னை:விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தெரிவித்து வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து வற்புறுத்தினார்.
முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய பின் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில்,
மதிமுக பொதுசெயலாளர் வைகோ விடுதலைப் புலிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தருவோம் என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வரிடம் பேசினேன்.
தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆதரவு அளிப்போம் என்பது கண்டிக்கதக்க ஒன்றாகும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல்வரிடம் வற்புறுத்தியுள்ளேன்.
வைகோ மீது நடவடிக்கை எடுப்பது குறித்து யோசனை செய்து முடிவு எடுப்பதாக முதல்வர் கூறினார். தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு யார் ஆதரவு தந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை தமிழர்கள் மீது எல்லோருக்கும் அக்கறை இருக்கிறது.
விடுதலைப் புலிகள் கடத்தி சிறை வைத்திருக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டேன்.
முதல்வரின் சட்டமன்ற பொன்விழா பொதுக் கூட்டம் வரும் மே மாதம் 11ம் தேதி சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கலந்து கொள்வது குறித்தும் பேசினோம் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications