மண்தோண்டும் போது வைர, நவரத்தின புதையல்
Subscribe to Oneindia Tamil
பண்ருட்டி:பண்ருட்டியில் மண் தோண்டும் போது வைர புதையல் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் செங்கல் சூளையில் வேலைப் பார்த்து வருகிறார்.
இவர் கட்டி வரும் வீட்டுக்காக மண் தோண்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது 4 அடி ஆழத்தில் பழங்கால் செப்பு பெட்டி கிடைத்தது.
அந்த பெட்டியை திறந்து பார்த்தும் அதில் வைர, வைடூரிய, நவரத்தின ஆபரணங்கள் இருந்ததை கண்ட கூலி தொழிலாளர்கள் ஆச்சரியமடைந்தனர்.
இது குறித்து தாசில்தார் அலுவலகத்திற்கு தகவல் தரப்பட்டது. இதன் மதிப்பை கணக்கிட முடியவில்லை. இந்த பழமையான ஆபரணங்கள் பல கோடி மதிப்புடையவை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications