போலீஸ் வேலைக்கு லஞ்சம்- வேலைக்குபின் போலீஸ் லஞ்சம்: விஜய்காந்த்
சென்னை:போலீஸ் வேலையில் சேர லஞ்சம் கொடுப்பவர்கள் வேலையில் சேர்ந்ததும் பணம் சம்பாதிக்க பார்க்கிறார்கள். இதனால் தான் லஞ்சம் ஒழியாமல் உள்ளது. கள்ளச் சாராயமும் ஒழியாமல் உள்ளது என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கிவிட்டு இப்போது நாங்கள் முடங்கிப் போய்விட்டதாக சொல்கிறார்கள். அது தவறு. தினந்தோறும் அறிக்கைகள், சவால்கள் விட்டு என்னால் கட்சி நடத்திக் கொண்டிருக்க முடியாது. நான் வித்தியாசமான அரசியல் நடத்த விரும்புகிறேன்.
![]() |
நாங்கள் பேனர்கள் வைத்தால் அதை தடுக்கிறார்கள். மீறி வைத்தால் அகற்றுகிறார்கள். பேனர்-போஸ்டர் இல்லை என்பதால் கட்சியே காலியாகிவிட்டது என்கிறார்கள். நாங்கள் என்ன தான் செய்வது.
சட்டசபையில் நான் பேசினால் கூட கண்டுகொள்ள மறுக்கிறார்கள் (இவர் பெரும்பாலும் அவைக்கே வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது). கூட்டணி கட்சிகள் கோரிக்கை வைத்தால் மட்டும் ஏதாவது அறிவிப்பு செய்கிறார்கள்.
ஒருவரையொருவர் குறை சொல்வது தான் அங்கு நடக்கிறது. மக்கள் பிரச்சனையை பேசுவதே இல்லை. சண்டை போடுவதும், வெளிநடப்பு செய்வதும் தான் நடக்கிறது.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியை என் தொகுதிக்கு கொடுத்துவிட்டேன். அது தவிர என் சொந்த செலவிலும் நிறைய செய்துள்ளேன். என் எம்எல்ஏ சம்பளத்தையும் தொகுதிக்குத் தான் தருகிறேன்.
கோவில்கள் சீரமைத்துள்ளேன். கிருஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உதவியுள்ளேன்.
மதுவை ஒழிக்க முடியாது என கருணாநிதி கூறுகிறார். போலீஸ் லஞ்சம் வாங்குவதால் தான் அந்த காலத்திலிருந்தே மதுவை ஒழிக்க முடியவில்லை.
போலீஸ் வேலையில் சேர லஞ்சம் கொடுப்பவர்கள் வேலையில் சேர்ந்ததும் பணம் சம்பாதிக்க பார்க்கிறார்கள். இதனால் தான் லஞ்சம் ஒழியாமல் உள்ளது. கள்ளச் சாராயமும் ஒழியாமல் உள்ளது என்றார் விஜய்காந்த்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!













Click it and Unblock the Notifications