ஈராக் குண்டுவெடிப்பில் திருச்சி, மதுரை,மானாமதுரையைச் சேர்ந்த 3 பேர் பலி
திருச்சி:ஈராக்கில் நடந்த கார் குண்டுவெடிப்பில் திருச்சியைச் சேர்ந்த தொழிலாளி பலியானார்.
திருச்சி அருகே உள்ள வாகனேரி, உப்பிலியாத் தெருவைச் ேசர்ந்தவர் பெருமாள். இவருக்கு கணேசன் (21), மாரிமுத்து, முனீஸ்வரன் என மூன்று மகன்கள். பால் வியாபாரம் செய்து வருகிறார் பெருமாள்.
![]() |
கணேசனின் சித்தப்பா புகழேந்தி ஈராக்கில் வேலை பார்த்து வருகிறார். அவர் மூலமாக கணேசன் கடந்த ஆண்டு மே மாதம் ஈராக்கில் வேலைக்குச் சேர்ந்தார்.
ராணுவ வீரர்களுக்கு உணவு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார் கணேசன். இந்த நிலையில் புதன்கிழமை இரவு தனது வீட்டுடன் தொடர்பு கொண்டு பேசினார் கணேசன். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து கார் குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தார்.
கணேசனுடன் மேலும் 4 பேரும் கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தனர். இத்தகவல் நேற்று அதிகாலை கணேசன் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது.
கணேசன் கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த செய்தியை அறிந்த புகழேந்திக்கு மன நலம் பாதிக்கப்பட்டது. அவர் ஈராக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கணேசனின் குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியது.
கணேசனின் உடலை திருச்சிக்குக் ெகாண்டு வர உதவ வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கணேசன் குடும்பத்தினர் கோரியுள்ளனர். இதையடுத்து தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
![]() |
கணேசன் வீட்டுக்கு திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ேடார் சென்று ஆறுதல் கூறினர்.
இந்த குண்டுவெடிப்பில் இறந்த மற்ற 3 பேரில் ஒருவர் மதுரையைச் சேர்ந்தவர் என்றும், இன்னொருவர் மானாமதுரையைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. மூன்றாவது நபர் நேபாளத்தைச் ேசர்ந்தவர் என்று தெரிகிறது.
கணேசன் 1 லட்சம் செலவு செய்து ஈராக் சென்றுள்ளார். வேலையில் சேர்ந்த பின்னர் மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம வரை அனுப்பியுள்ளார். புதன்கிழமை இரவு போனில் பேசியபோது கூட ரூ. 25 ஆயிரம் பணம் அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிறிது நேரத்தில் கார் குண்டுவெடிப்பில் சிக்கி பலியாகியுள்ளார். கணேசனின் மரணத்தால் வரகனேரி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்














Click it and Unblock the Notifications